வாஷிங்டன் சுந்தருக்கு ‘இம்பேக்ட் வீரர் விருது’: இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கியது
பிரிஸ்பேன், நவ.9-
வாஷிங்டன் சுந்தருக்கு ‘இம்பேக்ட் வீரர் விருது’ வழங்கி இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கி கவுரவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 13 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக அவர் 11 ரன்னில் இருந்த போது சர்வதேச 20 ஓவர் போட்டியில் 1,000 ரன்களை எட்டினார். அதாவது அவர் 528 பந்துகளில் ஆயிரம் ரன் மைல்கல்லை தொட்டார்.
1,000 ரன்களை எட்டிய
அபிஷேக் ஷர்மா
இதன் மூலம் அபிஷேக் ஷர்மா குறைந்த பந்தில் 1,000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 573 பந்துகளில் ஆயிரம் ரன்னை எட்டியதே சாதனையாக இருந்தது. அத்துடன் இந்த மைல்கல்லை குறைவான இன்னிங்சில் எட்டிப்பிடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அபிஷேக் ஷர்மா (28 இன்னிங்சில்) பெற்றார். இதற்கு முன்னதாக இந்திய வீரர்களில் விராட் கோலி 27 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டிப்பிடித்து இருந்தார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) ஒவ்வொரு தொடரிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வீரருக்கு ‘இம்பேக்ட் வீரர் விருது’ வழங்கி கவுரவித்து வருகிறது.
அதன்படி இந்த தொடருக்கான இம்பேக்ட் வீரராக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த விருதுக்கான பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தொடரை வென்ற பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், ‘வானிலையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இந்த தொடரில் தோல்வியுடன் தொடங்கிய நாங்கள் அதில் இருந்து மீண்டு வந்த விதம் பாராட்டுக்குரியது வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது பணி என்ன என்பதை நன்கு தெரிந்து இருக்கிறார்கள். பும்ரா, அர்ஷ்தீப் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் எல்லோரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக எங்களுக்கு இன்னும் இரண்டு மூன்று தொடர்கள் உள்ளன. அது சரியான அணியை அடையாளம் காண உதவும்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பேசுகையில், இது ஒரு நல்ல தொடர். வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த தொடரில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. உலக கோப்பை அணியை நான் வழிநடத்துவேன்’ என்று தெரிவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?