வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 18.07.25

வாசகர் கடிதம்  (ஸ்ரீகாந்த்) 18.07.25


முகில் தினகரன் எழுதிய " அந்த மனசு தான் கடவுள்" படித்ததும் இந்த ஜோதி போல, எழுத்தாளர் ராஜேஷ் குமார் தன் முதல் வேலைக்கான நேர்காணலுக்கு போனபோது, சைக்கிளில் வைத்திருந்த மதிப்பெண் உள்ளிட்ட சான்றிதழ்கள் காணாமல் போய், பின்னர் திரும்பக் கிடைத்ததாக" என்னை நான் சந்தித்தேன்" நூலில் எழுதியுள்ளார். நேரிலும் திருச்சியில் 9 வருடங்களுக்கு முன்பு, நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இதைக் கூறக் கேட்டிருக்கிறேன்.


கயப்பாக்கம் ரமேஷ் எழுதிய " பைரவி" போல என் தம்பியும் ஒரு குட்டி நாய்க்கு " பைரவி " எனப் பெயரிட்டு வளர்த்தான். நன்கு வளர்ந்த பிறகும் நானோ , அவனோ வரும் வரை , வீட்டு கம்பி கதவின் குறுக்கே, எங்கள் அம்மாவின் பாதுகாப்பிற்காக அது படுத்துக் கிடந்த காட்சி

நினைவிற்கு வந்தது.


ஸ்ரீகாந்த்

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%