குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு எனப் படித்ததும், ஒத்திவைக்கும் வழக்கத்தை நீதிமன்றங்கள் ஒத்தி வைக்காத வரை எந்த வழக்கிலும் உடனடித் தீர்வு கிட்டாது என்றே தோன்றுகிறது. ஏற்கனவே பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.
சமயபுரம் கோயிலில் மஹாளய அமாவாசை முன்னிட்டு மூங்கில் தட்டில் வெற்றிலை பாக்கு, வாழை , பூசணி வைத்து மறைந்த பெற்றோர் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து அதை அந்தணரிடம் தட்சிணையோடு கொடுக்கலாம் அல்லது ஒரு சுமங்கலிப் பெண்ணிடம் தந்து ஆசி வாங்கலாம் என நம் நாளிதழ் மூலம் அறிந்தேன்.
மஹாளய அமாவாசையில் மட்டும் தான் தாய் வழி தந்தை வழி என 3 தலைமுறைகளுக்கு தர்ப்பணம் கொடுப்பதாக வெளியான கட்டுரையில், ஒரு சிறு திருத்தம், இதர அமாவாசைகளிலும் இரு வழி முன்னோர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கிறோம் என்பதே சரி.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?