வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 12.09.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 12.09.25



தமிழ் நாடு இ பேப்பரின் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.


நானும் கோவை வாசக 

சொந்தம் திரு. சிவசங்கர் அவர்களும் 

நேற்று அலைபேசியில் 

சுமார் ஒரு மணி நேரம் 

உரையாடினோம்.


தமிழ் நாடு இ பேப்பர் குழுமம் குறுகிய காலத்தில் அடைந்த 

அபார வளர்ச்சி குறித்தும் வாசக சொந்தங்களின் ரெஸ்பான்ஸ் பற்றியும் 

கொஞ்சம் சீரியஸாகவே பேசினோம்.


இப்படி உரிமை எடுத்து பேசுவதற்கு 

நீங்க அவர்களுக்கு என்ன மாமனா?

மச்சானா என்று கேக்கிறீங்களோ...


(சும்மா ஒரு தமாசுக்குத் தான் சொன்னேன்)


வாசக சொந்தம் என்ற

உரிமையில்-- அன்பில் தான் தொடர்ந்து இயங்கி வருகிறோம் என்று இந்த தருணத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.


எங்கள் இருவருக்கும் தமிழ் நாடு இ பேப்பர் 

குழுமத்தின் வெளியீடுகள் மட்டுந்தான் தெரியும்.

அன்பான அக்கறையில் இந்த குழுமத்தின் வளர்ச்சி குறித்து தொடர்ந்து வாசகர் கடிதம் எழுதி வருகிறோம்.

இதில் எந்தவொரு சுயநலமும் எங்களுக்கு கிடையாது.


தமிழ் நாடு இ பேப்பரின் வாசக சொந்தங்களை இணைத்து வைத்து 

மாபெரும் இயக்கமாக 

ஆக்கப்பூர்வமான சத்சங்க சங்கமமாக 

உருவாக்க வேண்டும் என்ற பேராசை இல்லை பெரிய ஆசை 

எங்களுக்கு உண்டு.


எங்களின் விருப்பத்தை வாசகர் கடிதங்களில் சுட்டிக் காட்டுவதோடு மட்டும் நில்லாமல் வாசக சொந்தங்கள் சிலரிடம் மனம் விட்டுப் பேசி 

எங்களின் விருப்பத்தை வெளிப்

படுத்தி இருக்கிறோம்.

கேட்டவர்கள் எல்லாம் 

ஓகே சொல்லித் தான் உற்சாகப் படுத்தி வருகிறார்கள்.

இதுவரை யாரும் 

எதிர் மறையாக கருத்து சொல்ல வில்லை என்பது 

ஆறுதலான விஷயம்.


நேற்றைய உரையாடலில் திரு.

சிவசங்கர் கூறிய எதார்த்த கருத்தை இங்கே சொல்லாமல் இருக்க என்னால் முடிய வில்லை.


எந்தவொரு விஷயமும் 

இலவசமாக கிடைக்கும் போது 

அதற்கு உரிய மதிப்பு கிடைக்காது.

இது உளவியல் ரீதியிலான மறுக்க முடியாத உண்மை.


ஆசிரியர் குழுவினர் 

அல்லும் பகலும் அயராது உழைத்து 

இருபது பக்கங்களில் 

செய்திகளையும் 

பயனுள்ள தகவல்களையும் 

இலக்கிய படைப்புகளையும் 

வாரி வாரி வழங்கி வந்தாலும், இலவசம் 

என்பதால் அவற்றின் மதிப்பு பல பேருக்கு தெரிவதில்லையே ...

எதையும் காசு கொடுத்து வாங்கும் போது தான் மனதளவில் அதனதன்

மதிப்பை உணர முடியும்..."


நண்பர் கூறியது முதலில் எனக்கு உடன்பாடு இல்லாதது

மாதிரி தான் இருந்தது.


யோசிக்க யோசிக்க அவர் கூறியதில் அர்த்தம் இல்லாமல் இல்லை என்று முடிவுக்கு வந்தேன்.

காரணம்...

நாட்டு நடப்புகளை வரிசையாக மனதில் ஓட விட்டுப் பார்த்தேன்.


இப்போது என் மனதும் 

உரத்துச் சொன்னது:


இலவசம் என்றால் 

இளக்காரமாக தோன்றுவது இங்கே 

இயல்பாகி விட்டது.

இது தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வெளியீடுகளுக்குப்

பொருந்தாது என்பது வேறு விஷயம்.


ஆனாலும் நண்பர் கூறியது என் மனதில் 

சில மாற்றங்களை

உண்டு பண்ணி இருக்கிறது என்பதை மறைக்க விரும்பவில்லை.


வாசக சொந்தங்களே! இது சம்பந்தமாக என்ன நினைக்கிறீர்கள் ?


மனந்திறந்து சொல்லுங்களேன்,

பார்ப்போம்!



பி.வெங்கடாசலபதி

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%