
ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்தத்துக்காக உலகமே உண்ணிப்பாக
உற்று நோக்கிக் கொண்டிருந்த ட்ரம்ப் - புடின்
பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாமல் உடைந்து போய் உள்ளது.
அடுத்து ரஷ்யா, உக்ரைன்,
அமெரிக்க அதிபர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார்களாம்.
போர் நிறுத்தம் பற்றிய ஒரு எண்ணமே இரண்டு தரப்பினருக்கும் ஏற்படவில்லை என்று தோன்றுகிறது. இரண்டு நாடுகளின் தாக்குதல்கள் மூலம் இது புலனாகிறது. பேச்சுவார்த்தை ஆரம்பிக்க சில மணித் துளிகள் இருக்கும் போது ரஷ்யப் பகுதியில் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இந்நிலையில் ட்ரம்ப் தலை கீழாக நின்றாலும் போர் நிறுத்தத்தை கொண்டு வர முடியாது.
ஆனால் உலகத்தில் தாதாவாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
ரஷ்யா போர் நிறுத்தம் செய்யாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டுகிறார்.
உருட்டி மிரட்டி போரை நிறுத்தி சமாதானத்துக்கான நோபல் பரிசை வாங்கலாம் என்று நினைக்கிறார்.
அமைச்சர்
ஐ.பெரியசாமியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் இருப்பிடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியிருக்கிறது.
அமலாக்கத் துறை நடத்திய சோதனைகள் மூலம் பதியப்பட்ட நாலாயிரத்துக்கு மேற்பட்ட வழக்குகளில் 40 வழக்குகளுக்கு மட்டும் தண்டனை கிடைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. மற்ற வழக்குகள் தோல்வியடைந்து இருக்கின்றன.
எப்படியோ தேர்தல் நெருங்க நெருங்க அமலாக்கத் துறையின் ஆட்டம் ஆரம்பித்துவிட்டது. இது எதில் போய் முடியுமோ என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
மத்திய அரசுக்கும், மத்திய அரசுக்கு ஒத்துப்போகாத எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
உலக வரலாற்றில் முதன் முறையாக இந்தியாவில் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படும் ஓட்டு திருட்டை மக்களிடையே பிரபலப்படுத்தி வருகிறார் ராகுல் காந்தி. ஆனால் பெரும்பாலான சாதாரண வாக்காளர்களோ
வாக்களிப்பதற்கு பணம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.
வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?