வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 17.08.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 17.08.25


  வி.பிரபாவதியின் 'விதை நெல்' என்ற சிறுகதை பெண்ளுக்கு பெருமை தரும் விதத்தில் இருந்தது. கணவர் இறந்தபின்னும் கோமதியம்மாள்தான் வழக்கம்போல விதைநெல் எடுத்து தரவேண்டும் என்று சொல்லும் அந்த கிராம மக்களிடம் மூடநம்பிக்கை இல்லாதது மகிழ்ச்சியை தருகிறது. அதோடு அவர்களது நன்றியுள்ளம் பெருமிதம்படி இருக்கிறது.


  வி.கே.லக்ஷ்மி நாராயணனின் 'விட்டக்குறை தொட்டக் குறை!' என்ற சிறுகதையில் மாணிக்கத்தின் மனிதநேயம் மனதை நெகிழ வைத்தது. போன ஜென்மத்துவிட்டக்குறை தொட்டக் குறை இதுதான் என்று தங்கம் நினைப்பது சரிதான். மோசமான இந்த உலகத்தில் மாணிக்கத்தைப்போன்ற இளகிய மனதுக்காரர்களும் இருப்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.


  கயப்பாக்கம் இராமேஷின் 'கள்ளப்பா' தொடர் கல்லூரி மாணவன் ரவியின் காதல் எண்ணங்களை அழகாக வெளிப்படுத்தியது. இயற்கையழகு நிரம்பிய இந்த தொடர் இதயத்தைக் கவர்ந்து செல்கிறது.


  ஏரி காத்த ராமர் கோவில் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என்.பத்ரியின் கட்டுரையின் மூலம்தான் நான் அந்த கோயிலின் முழு விபரங்களையும் அறிந்து மகிழ்ந்தேன்.


  இப்போதுள்ள நமது இந்திய தேசியக்கொடியை வடிவமைத்த சுரைய்யா பதுருத்தீன் தயாப்ஜியின் சுருக்கமான வரலாறு படிக்க சுவாரஷ்யமாக இருந்தது. ஒரு இந்திய குடிமகன் என்ற வகையில் இதைப்போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்வது அவசியம் என்று நான் கருதுகிறேன்.


  திருமதி இரா. இராஜாமணியின் 'மழைத்துளிகளின் அணிவகுப்பு' என்ற கவிதையை படித்து, மழை நீரின் சாதாரண அதன் இயல்பை, அது ஏழைகளிடம் ஒரு விதமாகவும், பணக்காரர்களிடம் ஒருவிதமாகவும் நடப்பதாக கற்பனை செய்திருப்பது மிகவும் பொருத்தமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது. இந்த மழைத்துளிகளின் அணிவகுப்பு என்ற கவிதை இன்னும் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது!


  -சின்னஞ்சிறுகோபு,

   சிகாகோ.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%