
உலக நாடுகளின் பொருட்களுக்கு அதிக வரி விதித்ததால் அமெரிக்க கஜானாவில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது என்று ட்ரம்ப் குதூகளிக்கிறார்.
ஆனால் அமெரிக்க மக்களோ
உயர்ந்து வரும் விலைவாசியால் மளிகை சாமான் முதல் பல பொருட்களின் விளையும் ஏறிவிட்டதாக குமுறுகின்றனர்.
அமெரிக்காவுக்கு அனுப்பி வந்த முட்டை ஏற்றுமதி நின்று போய்விட்டதால் நாமக்கல் கோழி பண்ணையாளர்கள் குழம்பிப் போய் நிற்கிறார்கள்.
திருப்பூர் பின்னல் ஆடை ஏற்றுமதியாளர்கள் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாக புலம்புகின்றனர்.
ட்ரம்ப்பும் புடினும் நேரடி பேச்சு வார்த்தை நடத்தப் போவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. எங்கே எப்போது என்பதுதான் பிறகு தீர்மானிக்கப்படும் என்று செய்தி வருகிறது.
ஒருவேளை பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தால் ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்திருக்கும் நாடுகளின் மீது போடப்பட்ட கூடுதல் வரியை விலகிக் கொள்ளும்படி
புடின் ட்ரம்பை கேட்கலாம்.
தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பலவிதமான முறைகேடுகளை அரங்கேற்று வருவதாகவும் அதன் காரணமாகத்தான் பல தொகுதிகளில் பாஜக ஜெயித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதாரத்துடன் குற்றம் சாட்டுகிறார்.
இந்த குற்றச்சாட்டின் மூலம் மக்களின் மனதில் சந்தேகம் முளை விட்டு இருக்கிறது.
பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் ஏகப்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள்
குற்றம் சாட்டி பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகின்றன.
வெ,ஆசைத்தம்பி
தஞ்சாவூர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?