வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 26.08.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 26.08.25



பால்ய நண்பர் எதிர்பாரா விதமாக 

வீட்டுக்கு வந்திருந்தார்.

சந்தித்துப் பேசி நீண்ட நாட்கள் ஆனதால், நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசினோம்.

அருள் தரும் தெய்வம் இதழையும் விட்டு வைக்க வில்லை.

ஆன்மீகம் பற்றிய பேச்சு வரும் போது 

என் டேபிள் மேலிருந்த 

தெய்வத்தை எடுத்து வந்து அவரிடம் நீட்டினேன். 


ஆவலுடன் வாங்கிய நண்பர் மேலோட்டமாக புரட்டி பார்த்தார். கண்களை அகலத் திறந்து, புருவம் உயர்த்தி புன்னகை புரிந்து சொன்னது தான் இங்கே முக்கியத்துவம் ஆகிறது. அவரின் கூற்றைக் கேட்டு கொஞ்சம் அசந்து தான் போனேன் நான்.

காரணம்... அவரிடம் இருந்து இப்படியொரு 

விமர்சன கருத்தை எதிர் பார்க்க வில்லை.


தெய்வம் இதழை என்னிடம் வாங்கிய உடல் மொழிக்கும் பார்த்து விட்டு திருப்பித் தரும் போது

அவர் வெளிப்படுத்திய உடல் மொழிக்கும் ஏறக்குறைய தலைகீழ் வித்தியாசம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பவ்வியமாக 

( பக்தி கலந்த) திருப்பி தந்தார். அதுவே எனக்கு பெரும் ஆச்சர்யமாக இருந்தது.

தந்து விட்டு அவர் சொன்ன வார்த்தைகள் இருக்கிறதே....

அடடா... பெரியவர்கள் பெரியவர்கள் தான் என்று வாய் திறந்து சத்தம் போட்டு சொல்லத் தோன்றியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


" Who am I? Why am I?

How am I ?


ஒவ்வொரு மனிதனும் தன்னை அறிவதற்கு இந்த மூன்று கேள்விகளையும் அடிக்கடி கேட்டு சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் இப்போது என்னிடம் காட்டிய தெய்வம் இதழை படித்தால் மேலே குறிப்பிட்ட மூன்று கேள்விகளுக்கும் 

தயக்கமோ தடங்கலோ இல்லாமல் தெளிவாக பதில் சொல்லி நம் ஆத்ம பலத்தின் வலிமையை அதிகரித்துக் கொள்ளலாம்..."

என்று கனகச்சிதமாக சொல்லி தெய்வீகமாய் சிரித்த அந்த என் பால்ய நண்பர் நான் கேட்காமலேயே தெய்வத்திற்கு மூன்றாண்டு சந்தாவை

( ரூ. ஆயிரம்) செலுத்தி விட்டார்.

சரி, இன்றைய மேட்டருக்கு வருவோம்.


ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கினால் 10

ஆண்டுகள் சிறை


இந்த திடீர் சட்டம் அவசர அவசரமாக கொண்டு வந்ததற்கு காரணம் இல்லாமல் இருக்குமா? அது 

எல்லோருக்கும் தெரிந்தது தானே!


சுதர்சன ரெட்டி மீதான விமர்சனம் அமித்ஷாவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கண்டனம்!

அந்த வகையில் சி.பி.ஆர்.தப்பித்தார்.

அப்படி ஒன்றும் விமர்சனம் வந்த மாதிரி தெரியலியே!

சபாஷ் சொல்லியே ஆக வேண்டும்!


நலம் தரும் மருத்துவம் பகுதியில் இஞ்சியின் மருத்துவ குணங்கள்..

நல்ல பயனுள்ள தகவல்கள்.

என்னைப் பொறுத்தவரை தயிர் சாதத்தில் எப்போதாவது பல்லில் 

அரைபடும் ( என் சகதர்மிணி சமையலில்) மினி இஞ்சித் துண்டு

தேவாமிரதமாய் தூக்கும். உளுந்த வடையில் எதிர்பாரா சமயத்தில் அரைபடும் 

இஞ்சித் துண்டு இமாலய சாதனையாய் தோன்றும்!

இஞ்சி என்றால் எனக்கென்னவோ

எப்போதுமே நெஞ்சின் 

ஆழ விருப்பம்.


மேல் நோக்கு நாள் 

கீழ் நோக்கு நாள் 

அலசல் கட்டுரை அபாரம்.ஆனந்தம்!

ஜான்சி ராணி லெட்சுமி ராய்க்கு பெரிதும் உதவிய 

உத்தமர் தாந்தியா தேசிபே வரலாறு செம க்ளாஸ்! ராயல் சல்யூட்!

வழக்கம் போல் பல்சுவை களஞ்சியம் 

அற்புதம் அற்புதம்..

கவிதைப் பக்கங்களை 

கேட்கவும் வேண்டுமா என்ன...அத்தனையும் 

ஆனந்த அசத்தல்

இன்னும் நாலு என்ன எட்டுப் பக்கங்கள் கூட 

எழுதி மகிழ எத்தனையோ செய்திகளும் தகவல்களும்...

தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்தினருக்கு 

என்றென்றும் 

நன்றிகள்...

வாழ்த்துக்கள்...

பாராட்டுக்கள்!



பி.வெங்கடாசலபதி

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%