தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் சார்பாக வெளிவரும் அருள் தரும் தெய்வம் இதழுக்கு இரு சந்தாதாரரை இணைத்து வைத்த சந்தோஷத்தில் வாசகர் கடிதம் எழுதுவதை பெருமையாக உணர்கிறேன்.
இன்றைய திருக்குறள்
அருளிய வாழ்க்கைப் பாடம் என்னை மிகவும் கவர்ந்தது.
இவ்வுலகில் நிலை யில்லாதவைகளை யெல்லாம், நாடி, தேடி,
ஓடி அலையும் அவலத்தில் நாமும் சிக்கி விடக் கூடாதென்ற எச்சரிக்கையை தேர்ந்த நயத்துடன் கற்றுத் தந்தது அந்த அருமையான குறள்.
முத்து முத்தான வாழ்வியல் சிந்தனைகளை வழங்கி வான் புகழ் பெற்ற வள்ளுவப் பெருந்தகையை நினைந்து தொழுது
நன்றி உணர்வை எனக்குள் தெளிந்து
திருப்தி அடைந்தேன்.
இந்தப் பேருணர்வுக்கு காரணமாக இருக்கும்
தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்தின் ஆக்கப் பூர்வமான சிந்தனைக்கும் தலை தாழ்ந்து நன்றி தெரிவிக்கிறேன்.
இதே மாதிரியான மன மகிழ்ச்சியை இன்றைய சிந்திக்க ஒரு நொடி வாசகம்
தந்தது.
கை தவறினால் பொருள் உடையும் என யோசிப்பவர்கள் வாய் தவறினால் மனம் உடையும் என யோசிப்பதில்லை...
எவ்வளவு அற்புதமான வரிகள்... இரு முறை வாசித்து மனதில் பதித்துக் கொண்டேன்.
இதையெல்லாம் மனிதன் புரிந்து தெளிந்து நடந்தால்
இன்று தலைப்புச் செய்தியாக வந்திருக்கும் தாய்லாந்து -- கம்போடியா மோதலால் பெரும் பதற்றம்.
முகாம்களில் 138000
மக்கள் தஞ்சம்...
இந்த மாதிரியான சம்பவச் செய்திகளைப்
படித்து சங்கடத்தில் நெளிய வேண்டிய அவசியம் வந்திருக்காதே!
மெத்தப் படித்த மேதாவிகளான அரசியல் தலைவர்கள்
இதற்கு தீர்வு கண்டு பிடிக்காமல் நாடுகளுக்கிடையே நடக்கும் போர்களை வேடிக்கைப் பார்ப்பது என்ன நியாயம்?
போர் கூடாது என்று தங்களிடம் இயல்பாய் பொங்கியிருக்கும் ஆளுமைப் பண்பின்
திறனையும் குவிந்திருக்கும் அதிகார பலத்தையும்
பயன் படுத்தி உலக அமைதிக்கான பணியில் வரிந்து கட்டிக் கொண்டு எழுச்சி காண வேண்டாமா? என்னைக் கேட்டால் இந்த விஷயத்தில் எல்லா தலைவர்களும்
போரை நிறுத்தும் முயற்சியில் சரியான முன்னெடுப்பு நடவடிக்கை எடுக்காத
குற்றத்திற்காக கூண்டில் நிறுத்தப் பட வேண்டியவர்களே...!
இதில் இரு வேறு கருத்துக்கே இடமில்லை...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உடல் நிலையில் முன்னேற்றம்.
சந்தோஷம் அளிக்கும் செய்தியாக இருந்தது.
நலம் தரும் மருத்துவம் அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த சீரகத்தின் நன்மைகள்
பற்றிய தகவல் தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது சிறப்பு.
எனக்கொரு யோசனை
தோன்றியது.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் இதுவரை வெளியான கட்டுரையை நல்ல முறையில் தொகுத்து
நலம் தரும் நூலாக வெளியிடலாமே!
அன்பு கூர்ந்து ஆசிரியர் குழுமத்தினர்
இதை பரிசீலிக்க வேண்டும் என்று விழைகிறேன்.
வட்டார செய்திகளின் அணிவகுப்பு அசத்தலோ அசத்தல்!
கவிஞர்களின் கருத்துக் குவிப்புகள்
கலக்கலோ கலக்கல்!
இன்னும் சொல்லி சிந்தை குளிர்வதற்கு எத்தனை எத்தனையோ உண்டு.
இத்தகைய அற்புதமான அனுபவப்
பகிர்தலுக்கு வாய்பளிக்கும் தமிழ் நாடு இ பேப்பரின்
அளப்பரிய சேவைக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்.
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
பி.வெங்கடாசலபதி
தென்காசி