இன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் நலம் தரும் மருத்துவம் பகுதியில் வெள்ளரி மற்றும் ரோஜா இதழ் டிடெக்ஸ் வாட்டர் உடலை எப்படி குளிர்ச்சியாக்கி நச்சுத்தன்மை நீக்கும் சக்தி வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது என்பதை சொல்லுகிற விதமாக அமைந்திருந்தது. சிறுகதை பக்கத்தில் முகில் தினகரன் லட்சுமி நாராயணன் இரண்டு எழுத்தாளர்களின் சிறுகதை படித்தேன் .சிறிய கதை கருவை மிக நேர்த்தியாக கதையாக வடித்து இருந்த விதம் சிறப்பாக இருந்தது இரண்டு எழுத்தாளர்களுக்கு பாராட்டுக்கள். ஆன்மீக களஞ்சியம் பகுதியில் நாயன்மார் வரிசையில் சிறு தொண்டர் நாயனாரின் வரலாறு மிகச் சிறப்பாக இருந்தது பெற்ற குழந்தையை கறி சமைத்து சிவனடியார்க்கு இருந்துட்டு இறையருள் பெற்ற அவரின் சிவ தொண்டை மிக நேர்த்தியாக சொல்லி இருந்த விதம் சிறப்பு. கந்தசஷ்டி விரதம் இருக்கும் இந்தநாளில் சஷ்டி விரதம்எப்படி இருக்க வேண்டும் என்று நல்லதொரு ஆன்மீக தகவலை வழங்கிய தமிழ்நாடு இ பேப்பர் ஆசிரியர் குழுவிற்கு எனது பாராட்டுக்கள்.

கவி-வெண்ணிலவன்
மணமேல்குடி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?