
அன்புள்ள ஆசிரியருக்கு,
28.08.25ம் தேதியிட்ட இ. பேப்பரில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்காவில் 50% வரி அமல் என்ற தலைப்புச் செய்தியில் ஆரம்பித்து ராகுல் பேரணியில் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்பு, விநாயகர் சதுர்த்தி பற்றிய செய்திகள். காவிரி மேலாண்மை மூன்றாவது கூட்டம், முதல்வர் மருந்தகங்களில் கூடுதலாக 144 மருந்துகள் விரைவில் விற்பனை, சில ஆவணங்களை டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைக்கும் நில அபிவிருத்தி திட்டம், வெந்தயம் சாப்பிடுவதின் பயன், மசோதாக்களை கிடப்பில் போட்டால் தலையிடக்கூடாதா என்ற சுப்ரீம் கோர்ட் கேள்வி, ஆவின் கூட்டுறவு பெயர்களை சட்ட விரோதமாக பயன்படுத்தியது, பயணங்கள் முடிவதில்லை, தாரா ராணி ஸ்ரீ வஸ்தவா வரலாறு, திரைப்படச் செய்திகள், புதுக்கவிதைகள், நூல் விமர்சனம், வாசகர் கடிதங்கள், பல்சுவைக் களஞ்சியம், டிப்ஸ், ஜோக்ஸ், வாங்க சம்பாதிக்கலாம், சுற்றுலா, வேலைவாய்ப்பு, விஜய் கூட்டத்தில் நடந்த சம்பவத்திற்கு பவுன்சர்கள் மீது வழக்குப்பதிவு, ஓணம் பண்டிகை பற்றிய தகவல், உக்ரைன் அதிபர் இந்தியா வருகை, மூளையில் சிம் பொருத்திக் கொண்ட முதல் நபர் பற்றிய விவரங்கள், இது போன்ற இன்னும் எண்ணிலடங்கா விவரங்களை 20 பக்கங்களில் தொகுத்து வழங்குவது என்பது சாதாரண விடயம் அன்று. இத்தனை விவரங்களையும் உள்ளடக்கி வெளியிட்ட இ. பேப்பருக்கு ஒரு ராயல் சல்யூட்..
அன்புடன்
உ.மு.ந.ராசன் கலாமணி
4, சுபி இல்லம்
கிழக்குப் பூங்கா தெரு
கோபிச்செட்டிப்பாளையம் 638452.
அலைபேசி எண் 9994479931.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?