அன்புடையீர்
வணக்கம். 28.8.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் முதல் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாக்கலமாக கொண்டாடப்பட்டது என்ற செய்தியும் படமும் மன மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது. இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புதமான நாளாக அமைந்து என்னை உற்சாகத்துடன் வேலைகளை தொடங்க வேதவியது பாராட்டுக்கள்.
திருக்குறளை அதன் பொருளுடன் படித்து மகிழ்ந்தேன் நல்ல நல்ல திருக்குறளை 363 நாட்களாக கொடுத்து வரும் தங்களின் இந்த பணியை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அரசு விரைவு போக்குவரத்து கழக முன்னாள் இயக்குனர் சுரேஷ் பாலைய்யா இல்ல திருமண விழா என்ற செய்தி அருமை பாராட்டுக்கள்.
வெந்தயம் மிகவும் கசப்பானது தான் ஆனால் அந்த வெந்தயத்தை சாப்பிடுவதால் நோய்க்கு நோ சொல்லலாம் என்ற நலம் தரும் மருத்துவம் பகுதியில் வந்த வாசகங்கள் உண்மை.
ஸ்ரீவில்லி ஆவின் கூட்டுறவு பெயர்களை சட்டவிரோதமாக பயன்படுத்திய பால்கோவா கடைகளுக்கு நோட்டீஸ் கொடுத்தது மிகவும் நல்ல தகவல். இதனால் மக்கள் ஏமாறாமல் உண்மையாக தயாரிக்கப்படும் பால்கோவாவை வாங்கி அனுபவிக்க உதவும்.
தினம் ஒரு தலைவர்கள் பகுதி அற்புதம் என்றால் அது மிகையாகாது. இன்று தாரா ராணி ஸ்ரீ வஸ்தவா அவர்களின் வரலாறு மிகவும் அருமை. .இதுபோன்ற நல்ல வரலாற்று தகவல்களை கொடுத்து எங்களை உற்சாகமாக வரலாற்றுச் செய்திகளை தெரிந்து கொள்ள உதவும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
பல்சுவை களஞ்சியம் மிகவும் அருமை அதில் மறைக்கப்பட்ட உச்சிஷ்ட கணபதி மந்திரம் என்ற செய்தி புதுமையாக இருந்ததால் ஆவலுடன் படிக்க தோன்றியது. வாங்க சம்பாதிக்கலாம் பகுதியில் நல்ல நல்ல தகவல்களை சொல்வதால் உற்சாகமாக தொழில் தொடங்க உதவும் .
தமிழ்நாட்டின் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாநில தலைவர் இல்லத்திறப்பு என்ற செய்தி மிகவும் அருமை நேரில் பார்ப்பது போல இருந்தது.உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் நேரு அவர்கள் ஆய்வு செய்தது நல்ல தகவல் பாராட்டுக்கள்.
சுற்றுலா பக்கத்தில் வந்த சேலம் பிளான் பண்ணினால் நாம் ஆச்சரியப்படும்படியான நல்ல தகவல்களை சொன்னதால் ஆச்சிரியத்துடன் அதை படிக்க தோன்றியது. கிருஷ்ணகிரி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நூறு வீடுகளுக்கு விநாயகர் சாலை வழங்கிய இஸ்லாமியர்கள் மதத்தின் ஒற்றுமையை மிக அழகாக பறைசாற்றியது பாராட்டுக்கள்.
வாக்காளர் அதிகார யாத்திரை ராகுல் காந்தி அவர்களுடனும் பிரியங்கா காந்தி அவர்களுடனும் ரேஷ்வந்த் ரெட்டி பங்கேற்றது செய்தி வடக்கில் நடக்கும் அரசியலை மிக அழகாக சொன்னது.
கேரளாவின் மிக பிரசித்தமான ஓணம் பண்டிகை மிக அழகாக கொண்டாட தொடக்கம் படங்களுடன் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. மத்திய அரசு நிதியை தராததால் மாநில கருவூலத்தில் பெரும் சுமை என்று மம்தா பானர்ஜி அவர்கள் சொன்னது அங்கு நடப்பதை அழகாக படம் பிடித்துக் காட்டியது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர உள்ளார் என்ற செய்தி அயல் நாட்டு அரசியல் மிக அழகாக சொன்னது. இலங்கை முன்னாள் அதிபர் ராணியோ விக்ரம் சிங்கத்திற்கு ஜாமீன் வழங்கியது கோர்ஸ் என்ற செய்தியும் அயல்நாட்டு தகவலை மிக அழகாக சொன்னது.
எந்தப் பக்கத்திலும் புதுமையான தகவல்களை படங்களுடனும் ஆர்வத்துடன் எங்களுக்கு கொடுத்து உற்சாகமாக ஒவ்வொரு புதிய நாளையும் தொடங்க உதவும் தமிழ்நாடு இ பேப்பலரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
நன்றி
உஷாமுத்துராமன்