வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 29.08.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 29.08.25


அன்புடையீர் 


வணக்கம் 29.8.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர் முதல் பக்கத்தில் ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு என்ற செய்தி மகிழ்ச்சியாக இருந்தது இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புதமாக அமைய எனக்கு உதவியது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


இன்றைய திருக்குறளை பொருளுடன் படித்து மகிழ்ச்சி அடைந்தேன். கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசளித்தது பாராட்டுக்குரியது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி படங்களுடன் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.


நலம் தரும் மருத்துவம் பகுதி ஒரு அற்புதமான பகுதி. நாம் ஆரோக்கியமாக வாழ பலவித தகவல்களை சொல்லும் இந்த பகுதியை ஆர்வமுடன் படிக்கத் தோன்றுவது உண்மை. இன்று ஊற வைக்காமல் சாப்பிடக் கூடாத உணவுகள் என்ற செய்தியை படித்ததும் மிக அருமையான தகவல் என்று ஆவலுடன் தெரிந்து கொண்டேன்.


கேரள மாநிலத்தில் அந்த பல்கலைக்கழகத்தில் திருநங்கை திருநங்கைகளுக்கான விடுதி திறந்தது மிக அருமையான தகவல்.பாராட்டுக்கள். திருப்பதி தேவஸ்தானத்தில் நான்கு வேற்று மத ஊழியர்கள் சஸ்பண்ட் என்ற செய்தி திருப்பதியில் நடப்பது மிக தெளிவாக காட்டியது.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் தீன் தயாள் குப்தா அவர்களின் வரலாறும் புகைப்படமும் மிகவும் அற்புதம். நல்ல அருமையான வரலாற்றுச் செய்தி மன மகிழ்ச்சியுடன் படித்து மகிழ்ந்தேன்.


பல்சுவைக் களஞ்சியம் பகுதி மிகவும் அருமை சோம்பேறித்தனம் பற்றி படித்ததும் இது உண்மைதான் என்று உணர்ந்தேன். ஜோக்ஸ் படிக்க படிக்க சிரிப்பில் மகிழ்ந்தேன்.


தெய்வீக அருள் தரும் ஆன்மீகத்தில் வந்த அனைத்து தகவல்களும் மிகவும் அருமை. படிக்கும்போதே ஒரு ஆன்மீக உணர்வு வந்து உடல் புல்லரிப்பது உண்மை.


42 அடியில் தாம்பூல தட்டு விநாயகர் சிலை என்று செய்தி ஆர்வமாக பார்க்க வைத்தது. பஜனை விநாயகர் சிலை மிகவும் அற்புதம். எல்லா தகவல்களிலும் நல்ல நல்ல செய்திகளை கொடுக்கும் இந்த பக்கம் உண்மையிலேயே அற்புதமான பக்கம் என்று சொன்னால் அது மிகையாகாது.


சுற்றுலா பக்கத்தில் வந்த நீண்ட தூர சாலை பயணங்களை எளிதாக்க உதவும் சூப்பர் டிப்ஸ் உண்மையிலேயே பயனுள்ள தகவல் இதனால் சுகமான பயணமாக அமைவது உறுதி


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் நான்கு முறை அழைத்தும் பேச மறுத்த பிரதமர் மோடி அவர்கள் பற்றி படித்ததும் அரசியலை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. ஜம்மு-காஷ்மீரில் கனமழை என்ற செய்தி நல்ல தகவலாக இருந்தாலும் அங்கு வெள்ளத்தால் சூழாமல் இருக்க வேண்டுமே என்று தோன்றியது.


கருப்பு பணத்தை வெள்ளையாக்க அரசியல் கட்சிகள் செய்யும் அந்த முயற்சிகளைப் படித்ததும் அதிர்ச்சியாக இருந்தது.


புரையோடி போன ஊழலை எதிர்த்து இந்தோனேஷியாவில் மாணவர்கள் போராட்டம் செய்தது .அங்கு நடக்கும் அரசிலை மிக அருமையாக படம் பிடித்துக் காட்டியது. அமெரிக்காவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் லிசா குக் திடீர் பணி நீக்கம் செய்தது அதிர்ச்சியான தகவல்.


வெள்ளிக்கிழமை விடியலை வெள்ளந்தியாக சிரிப்புடன் தொடங்க நல்ல தகவல்களை அழகாக கொடுத்த தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 



நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%