வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 18.08.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 18.08.25

அன்புடையீர்,


வணக்கம்.18.8.2025 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் ஆவணி மாத பூஜை என்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறந்த சிறப்பு வழிபாடு மிகவும் அருமை பாராட்டுக்கள். இன்றைய பஞ்சாங்கம் மிக நல்ல நாளாக அமைய எனக்கு நல்ல செய்திகளை அழகாக கொடுத்தது.


நான் விரும்பும் ஒன்னே முக்கால் அடி திருக்குறளை பொருளுடன் படித்து மகிழ்ந்தேன். மனம் நிறைந்த பாராட்டுக்கள் குற்றால ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதும் அங்கு மக்கள் கூட்டமாக இருந்ததையும் பார்த்தவுடன் அந்த ஐந்தருவியில் குளித்த நினைவு மலரும் நினைவாக வந்தது.


சோதனைகளை சாதனைகளாக மாற்ற வேண்டும் என்று வி ஐ டி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கமலஹாசன் அவர்கள் சொன்னது மிகவும் நல்ல தகவல்.


சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை இரண்டு சக்கர வாகன பேரணியை துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள் தொடங்கி வைத்து படம் மிகவும் அருமை. அவர்கள் பத்திரமாக அந்த பயணத்தை முடித்து வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் சூரியா சென் வரலாறு மிகவும் அருமை படிக்கும் போது வரலாற்றுச் செய்திகளாக இருப்பதால் மனநிறைவு தருகிறது.


பல்சுவை களஞ்சியம் வழக்கம் போல் அமர்க்களமாக இருந்தது. ஜோக்ஸ் ஒரு முறை அல்ல பலமுறை படித்து சிரிக்க வைத்தது.


பன்முகம் பக்கத்தில் வந்த அனைத்து செய்திகளும் மிகவும் அருமை. ரத்த கொழுப்பு அதிகரித்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னது நல்ல தகவல்.


ஸ்ரீ கரியபாணிக்கம் பெருமாள் கோவிலில் உறியடி வைபவம் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. புதுகை முத்தமிழ் சங்கங்கள் நடத்திய இளம் படைப்பாளர்கள் தேடல் நிகழ்ச்சி மிகவும் அருமை. எல்லா செய்திகளும் மிகவும் அருமையாக இருந்தால் ஆவலுடன் படத்துடன் ரசித்து பார்க்க வைத்தது.


சுற்றுலா பக்கத்தில் வந்த புதுச்சேரி என்று அழைக்கப்படும் பாண்டிச்சேரியில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களை பட்டியலிட்டு சொன்னது அருமையான தகவல் பாராட்டுக்கள். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வயது 48 கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள் என்று மதுரையில் நடந்த செய்தியை மிக அருமையாக சொன்னது பாராட்டுக்குரியது.


ரூபாய் 129 கோடி வருவாய் ஈட்டி தமிழக சுற்றுலாத்துறை சாதனை படைத்தது அருமை. இதனால் சுற்றுலாத்துறை நன்றாக வளர்ந்துள்ளது என்று தெரிகிறது.


கடலோர காவல் படை சார்பில் இந்தியா இலங்கை எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் மிக அருமையான படத்துடன் பிரசுரித்தது கண்ணுக்கு விருந்தாகவும் செய்தி காதுக்கு விருந்தாகவும் இருந்தது பாராட்டுக்கள்.


பாகிஸ்தானில் பெய்த மழையினால் திடீர் வெள்ளம் ஏற்பட்டு அங்கு 300 பேர் சிக்கி உயிரிழந்த செய்தி வேதனை கொடுத்தது. துருக்கியில் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் மேல் உட்பட 40 பேர் கைது என்று இந்த செய்திகளை எல்லாம் படிக்கும் போது அயல்நாட்டு செய்திகள் மிக அருமையாக புரிகிறது பாராட்டுக்கள்.


தித்திக்கும் திங்கட்கிழமை தித்திப்பாகவே அமைய காலையில் நல்ல செய்திகளை முனைப்புடன் கொடுத்த தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


 நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%