வர்த்தகம் ஆயுதமாக்கப்பட்டுவிட்டது; ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்
Aug 30 2025
12

டெல்லி,
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார். மேலும், கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், இந்தியா , அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வர்த்தகம் ஆயுதமாக்கப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த விவகாரம் இந்தியா விழித்துக்கொள்ள விடுக்கப்பட்ட எச்சரிக்கை. வர்த்தகம் தொடர்பாக ஒரே ஒரு நாட்டை மட்டும் இந்தியா சார்ந்து இருக்கக்கூடாது. ஐரோப்பியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகத்தை இந்தியா விரிவுபடுத்த வேண்டும். அதேவேளை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 வரை அதிகரிக்க பொருளாதாரத்தில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வர்த்தகம், முதலீடு, நிதி என அனைத்தும் ஆயுதமாக்கப்பட்டுவிட்டது. நமது ஏற்றுமதி சந்தைக்கு மாற்று வழிகளை கண்டறிய வேண்டும். சீனா, ஜப்பான், அமெரிக்கா அல்லது எந்த நாட்டிடனும் வர்த்தகம் செய்யலாம். ஆனால், ஒருநாட்டை மட்டும் சார்ந்து இருக்கக்கூடாது. மாற்று சந்தைகளை கண்டுபிடித்து தற்சார்பு நிலையை அடைய வேண்டும். இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?