லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்எஸ்பி இஷா சிங், தில்லிக்கு பணியிட மாற்றம்
Jan 07 2026
15
லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்எஸ்பி இஷா சிங், தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிச லில் சிக்கி 41 பேர் பலியான பிறகு, முதல்முறை யாக கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரி உப்பளம் துறைமுக அரங்கில் நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஏற்க னவே பாஸ் கொடுக்கப்பட்ட 5 ஆயிரம் நபர்களை மட்டுமே காவல்துறையினர் உள்ளே அனுமதித்தனர். பாஸ் இல்லாத வர்களை உள்ளே அனுமதிக்க முயன்ற தவெக பொதுச் செயலர் உள்ளிட்ட நிர்வாகி களை புதுவை எஸ்எஸ்பி இஷா சிங் கடிந்து கொண்ட காட்சி இணையத்தில் வைரலானது. புதுவை கூட்டத்தில் எவ்வித அசம்பாவித மும் ஏற்படாமல் சிறப்பாக செயல்பட்ட தற்காக இஷா சிங்கை புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?