ரகசியம் சொல்லவா

ரகசியம் சொல்லவா



   " முகம் பார்க்கும்

     கண்ணாடி நீ

     எனக்கு மூக்கு

     கண்ணாடியும் நீயே ...."


      சில நேரம்

      சில்லறை போல்

      சிதறி வெடித்து

      ஓசை எழுப்பி

      சிரிக்கிறாய் ..."


      சில நேரம்

      மெல்லிய புன்னகையால்

      சுண்டி இழுக்கிறாய் .... "


      கோபம் கொண்டாள்

      கூட இதமாய்

      பதமாய் தவிக்கிறாய்

      அன்பைப் பூட்டி

      கோபத்தில் கூட

      திணறுகிறாய் ...."


      உன் விழியும்

       மனமும் என்

       பாத ஓசை

       கேட்க துடிக்கிறது ....."

        

        என் நிழல்

        கூட உனக்கு

        நிஜம் தான்

        உன் அன்பை

        புரிந்து கொள்ள

        மீண்டும் படிக்க

        முயலுகிறேன் .... "


        ஆனாலும் மௌனம்

        காட்டாதே விழியும்

        மதியும் தவிக்கிறது ....."


        புரிந்து பல நாள்

        புரியாமல் சில நாள்

        வாழ்க்கை எனும்

        ஓடம் வழங்கும்

        நல்ல பாடம் .... "


         ஏட்டு சுரைக்காய்

         அல்ல அனுபவ

         பயிற்சி கணவன்

         மனைவி மனவோட்டம் .... "


   - சீர்காழி .ஆர். சீதாராமன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%