மும்பையில் குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: பாலிவுட் நடிகர் கைது

மும்பையில் குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: பாலிவுட் நடிகர் கைது


 

மும்பை: மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, கே.ஆர்.கே என அழைக்கப்படும் பிரபல பாலிவுட் நடிகர் கமல் ரஷித் கான் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


மும்பை அந்தேரியில் உள்ள ஓஷிவாரா குடியிருப்பு வளாகத்தில் கடந்த 18 ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் ​​இரண்டு குண்டுகள் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டன. ஒன்று இரண்டாவது தளத்திலும், மற்றொன்று நான்காவது தளத்திலும் கண்டெடுக்கப்பட்டது.


அந்த குடியிருப்புகளில் ஒன்று ஒரு எழுத்தாளர்-இயக்குநருக்கு சொந்தமானது, மற்றொன்று ஒரு மாடலுக்கு சொந்தமானது.


இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆரம்பத்தில், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் எந்தவிட தடயமும் கிடைக்காத நிலையில், காவல்துறையினரின் நடவடிக்கையில் எந்தவித முன்னேற்றமும் காண முடியவில்லை.


இருப்பினும், தடயவியல் ஆய்வுக்குப் பிறகு, அந்த குண்டுகள் அருகில் உள்ள நடிகர் கமல் ரஷித் கானின் பங்களாவிலிருந்து சுடப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது.


இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு கான் ஓஷிவாரா காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். தனது வாக்குமூலத்தில், கான் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பயன்படுத்தி குடியிருப்பு வளாகத்தில் இரண்டு முறை சுட்டதை ஒப்புக்கொண்டார்.


இதையடுத்து பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நடிகர் கானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில், குடியிருப்பு வளாகம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, கான் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.


மேலும், உரிமம் பெற்ற தனது துப்பாக்கியை பரிசோதிப்பதற்காக சுட்டு பார்த்ததாக கான் கூறியிருந்தாலும், துப்பாக்கிச் சூட்டிற்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக போலீசாா் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%