முதல்வருடன் ஓபிஎஸ் முதல் சந்திப்புக்கே பாஜக கூட்டணிக்கு பயம்- சபாநாயகர்
Aug 09 2025
22

திருநெல்வேலி, ஆக.10-
முதலமைச்சருடன் ஓபிஎஸ் முதல் சந்திப்பை பார்த்து பாஜக கூட்டணி பயந்து விட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி-
• திருப்பூரில் காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளாரே?
அதிமுக எம்எல்ஏவிடம் வேலை பார்ப்பதால் தான், உதவி ஆய்வாளரை கொலை செய்வதற்கு துணிச்சல் வந்துள்ளது.
• பாஜகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து...?
பாஜகவுக்கு மற்ற யாருடனும் கூட்டணி தேவையில்லை. தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்திருந்தாலே போதும் என்ற தொனியில் செயல்பட்டு வருகிறது. அதனால் தான், பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரனுக்கு மத்திய அரசுக்கு ஏற்றாற்போல வேஷம் போடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் திமுகவை அவர் விமர்சித்து வருகிறார்.
•முதல்வர் ஸ்டாலின் - ஓபிஎஸ் சந்திப்பு குறித்து?
முதலமைச்சர் நடைபயிற்சியின் போது அவரை ஓபிஎஸ் சந்தித்ததையே பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு சந்திப்புக்கே அவர்கள் பயந்து விட்டார்கள். பாஜகவை பொருத்தவரை, ஒருவரை கூட்டணியில் சேர்க்க வேண்டுமானால் முதலில் ஆசை வார்த்தை கூறுவார்கள். அடுத்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மூலமாக அச்சுறுத்தி, பின்னர் ஓபிஎஸ்சுக்கு நேர்ந்ததை போல அவமானப்படுத்துவார்கள்.
• வட மாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை கொடுக்க போகிறார்களே?
கர்நாடகாவின் ஒரு தொகுதியில் மட்டும் 1 லட்சம் பேருக்கு மேல் போலி வாக்காளர்கள் சேர்த்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியே கேட்கக்கூடாது என ஆளுங்கட்சியினர் கூறி வருகிறார்கள். சொல்லப் போனால் நாடாளுமன்றத்திற்கு பிரதமர் வருவதே இல்லை. தேர்தல் ஆணைய நடவடிக்கை குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆர்எஸ்எஸ், இதுபோல் போலி வாக்காளர்களை சேர்த்து சதி செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?