
வி.கே.லக்ஷ்மிநாராயணன்
22,22 ஏ, ராமகிருஷ்ணா நகர் மெயின்
ரோடு, ராமகிருஷ்ணா நகர்
போருர், சென்னை 600 116
கொஞ்சநாட்களாக மாணிக்கத்துக்கு கடுமையான வயிற்று வலி கண்டது. எது சாப்பிட்டாலும் உடனே வாந்தி வரும்போல் உணர்வு ! அதனால் எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை .
மாணிக்கத்தின் மனைவி சுந்தரி கவலையுற்றாள். புருஷனுக்கு ஏதாவது ஒன்று ஆகிப்போனால் இரண்டு பெட்டைப் பிள்ளைகளின் கதி...நினைக்கும்பொழுதேபகீரென் றது !
பெண்களை பள்ளிக்கு அனுப்பியவள்
கணவனை டாக்டரிடம் கூட்டிச் சென்று
காண்பித்தாள்.
மாணிக்கத்தை நன்கு பரிசோதனை
செய்த டாக்டர் , " குடிப்பழக்கம் உண்டா," எனக் கேட்க அதற்கு " ஆறு மாசமா பழக்கம் சார் !" என்றான் மாணிக்கம்.
" இதோபார்ப்பா ! உன் குடல் கெட்டுக்கிடக்கு. இனியும் நீ தொடர் ந்து குடிச்சேன்னா உன் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. உடனே குடியை நிறுத்து !"
சுந்தரி அதிர்ச்சியுற்றாள். " டாக்டர் ! என் புருஷன் குணமாவாரா ..?" கண்ணீர் மல்க கேட்டாள்.
" நான் எழுதித்தர மாத்திரை மருந்து
களை வேளை தவறாமல் சாப்பிடச்
சொல்லு. கொழுப்புச் சத்து உள்ள ஆகாரங்கள் வேண்டாம். வெண் ணெய் எடுத்த நீர்மோர் நிறைய குடிக்கலாம். காரம்சாப்பிடக்கூடாது. ஒருமாசத்துக்கு மாத்திரை மருந்து எழுதித் தரேன். டியூரேஷன் முடிஞ்ச தும் வந்தால் போதும்.அநேகமா
சரியாகிடும். போய் வாங்க !"
டாக்டரிடம் விடைபெற்று கிளம்பி னார்கள் சுந்தரியும் மாணிக்கமும். வாசலில் இருந்த பார்மஸியில் மருந்து மாத்திரைகள், ஸிரப் பாட்டில் வாங்கிக் கொண்டாள் சுந்தரி.
" மச்சான்..பார்த்தியா ! உன்னோட குடிப்பழக்கம் எந்த நிலைமையில கொண்டு வந்து விட்டிருக்கு !"
" ஆமா..அவனவன் வருஷக்கணக்கா குடிக்குறாங்க. அவன்களுக்கு ஒண் ணும் ஆகல்ல. ஆறுமாசமாதான் நான் குடிக்குறேன்..சே! எனக்குப் போய் கேடு வந்திடுச்சே !" புலம்பினான் மாணிக்கம்.
" மச்சான் ! அவங்களப் பத்தி ஏன் கவலப்படுறே..உனக்கு வந்திருக்கும் குடல் நோய் ஆரம்பத்திலேயே கவனிச்சதால சுலபமா குணமாக்க முடியும். அதை நெனச்சி சந்தோஷ ப்படு !"
ஆறுமாதகால குடிப்பழக்கம்தான். ஆனாலும் மாணிக்கத்துக்கு சட்டெ ன்று விட்டு விட கஷ்டமாக இருந்தது. ஏதோ டி அடிக்ஷ்ன் ஸென்டர் என்று சொல்வார்களே ! அதில் அட்மிட் ஆகும் மொடாமுழுங்கிகள் கூட குடி
க்க கொஞ்சம் கொஞ்சமாக லிக்கர்
கொடுப்பார்கள். கடைசியில்தான் மொத்தமாக குடிப்பழக்கத்தை நிறுத்துவார்கள். ஆனால் டாக்டர் குடியையே தொடக்கூடாதுன்னு சொல்லிவிட்டாரே ! மாணிக்கம்
அங்கலாய்த்தான்.
மாணிக்கத்தை கண்ணில் விளக்கெ ண்ணெய் விட்டுக்கொண்டு கவனி த்தாள் சுந்தரி. அவன் நார்மலாக இருந்தது நிம்மதியைத் தந்தது.
சாப்பிடும் முன்னால் மாணிக்க த்துக்கு மாத்திரை தந்தாள். அரை மணி அவகாசம் கழித்து இடியாப்பம் தந்தாள். சாப்பிடஆவலாக இருந்தது. வாந்தியின் வாசனையே இல்லை. ரசித்து சாப்பிட்டான்மாணிக்கம். கடந்த சில நாட்களாக அனுபவித்து வேதனை தீர்ந்ததில் மகிழ்ச்சிஏற்ப ட்டது. அதன் பிறகு சிரப் சாப்பிட்டான்
கொஞ்சநேரம் கழித்து மற்றொரு மாத்
திரை உட்கொண்டான்.
அன்று இரவு அறைக்குள் எட்டிப் பார்த்த சுந்தரி அதிர்ச்சியடைந்தாள். மாணிக்கம் தரையில் உட்கார்ந் திருந்தான். பக்கத்தில் விஸ்கி பாட்டில். கிளாஸில் ஊற்றிகொஞ்சம் கொஞ்சமாக அருந்தினான்.
" மச்சான்...என்ன இது ?காலையிலதா
ன டாக்டர் படிச்சுப் படிச்சு சொன்னாரு நீ குடியைத் தொடக்கூடாதுன்னு. இப்போ குடிச்சிக்கிட்டிருக்கியே ! குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு ங்குறத நிரூபிச்சிட்டியே !அய்யோ நான் என்ன செய்வேன்..." புலம்பி கூக்குரலெடுத்து அழுதாள்.
மாணிக்கத்துக்கு சிரிப்பு வந்தது.
" அடியே ! இது விஸ்கியோ பிராந்தி யோ இல்ல.அக்குவாகார்டு வாட்டர். குடிச்சுப்பாரு " என்று சுந்தரி வாயில் கிளாஸை வைக்க பருகியது ஆர்டி னரி தண்ணீர்தான் என்பது புரிந்தது.
" எதுக்கு மச்சான் விஸ்கி பாட்டில்ல தண்ணிய ஊத்திக் குடிக்குறே ?" என்று தன் கண்களை முந்தானை யால் துடைத்துக்கொண்டாள்.
" அடிப்புள்ளே ! குடியை திடீர்னு விடக் கஷ்டமாயிருந்தது. அதான் இந்த ஐடியா! தண்ணீய விஸ்கி பாட்டில்ல ஊத்திக் குடிக்கறபோது சாஷ்சாத் விஸ்கியே என் தொண்டையில இறங்கறமாதிரி திருப்தி ! எப்படி என் ஐடியா ?"
புருஷனை முறைத்த சுந்தரி , " ஆக இன்னமும் உன்னோட மனசுல குடி ஆசை இருந்துக்கிட்டே இருக்கு ! நீ எப்பதான் உன் மனசுலேர்ந்துவிட்டொ ழிக்கப்போறயோ !" புலம்பியபடி அங்கிருந்து அகன்றாள் !
..............................................