" பிரம்மாண்ட மலை
பாறை என பிரமிக்க
வைக்க அதன்
உச்சி காண
என்றும் ஆசை .... "
மலையைக் கூட
அசைத்து பார்க்கும்
நெருப்பு காற்று
வேகமான நீரோட்டம் ..."
அருவியின் பெரு
முயற்சியால் பாறைகள்
உடைந்து பாகமாகி
அதுவும் சிதைந்து
தூண்கள் போலாகி .... "
நீரோட்டம் வெகுவாய்
தாக்கி கூழாங்கல்
போன்று சுருங்கி
கூழாங்கல்கள் நீரில் .... "
உருண்டு புரண்டு
முட்டி மோதி
உடைந்து தேய்ந்து
உராய்ந்து அழுத்தி ...."
பெரு மணலாய்
மீண்டும் போராடி
சிறுமணலாகி
ஆறு எனும்
படுகையில் ...."
தஞ்சம் புகுந்து
நீரை சுத்தம் செய்து
குடிநீராய்
மாற்றித் தருகிறது ..."
மணல் வீடு
காண அழகு
ஈரமணல் நடக்க
சுகம், நீரோட்டம்
காண சுகம் ..."
மணலைத் தோண்ட
ஆற்றிலே நீர்
சுரக்கும் மணல்
பரப்பு பாயை
விரித்தது போல்
அழகு தரும் ..."
மணல் தரும்
மலைகள் தான்
மூலவிதை
மலைகள் தான்
அழகு தேவதை ...."
- சீர்காழி. ஆர். சீதாராமன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?