ஆதிகாலத்து கப்பலின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன.
மலாக்கா: ஆதிகாலத்து மலாய் கப்பல் ஒன்றின் சிதைவுகள் மலாக்கா மாநிலத்தில் உள்ள செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள தீவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு, வரலாற்றுச் சிறப்புமிக்க மலாக்காவில் அண்மைய ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆக முக்கியமான தொல்பொருளாய்வுக் கண்டுபிடிப்புகளில் ஒன்று என மாநில முதலமைச்சர் அப் ராவ்ஃப் யூசோ கூறினார். ஏறத்தாழ 50லிருந்து 70 மீட்டர் நீளம்கொண்டதாக கணிக்கப்பட்டுள்ள, மரக்கட்டையால் செய்யப்பட்டிருக்கும் இக்கப்பல் மலாக்காவின் வரலாற்றுச் சிறப்புத் தன்மையை மேலும் எடுத்துரைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“சரிபார்த்துப் பாதுகாப்பாக வைக்க இந்தத் தொல்பொருளாய்வுக் கண்டுபிடிப்பு மிகுந்த கவனத்துடன் கொண்டு செல்லப்படுகிறது.
“பாதுகாத்து ஆய்வு மேற்கொண்ட பிறகு இது மலாக்காவின் அரும்பொருளகங்களில் ஒன்றில் வைக்கப்படும்,” என்று அவர் வியாழக்கிழமை (அக்டோபர் 30) குறிப்பிட்டார்.
இந்தக் கண்டுபிடிப்பு, மலாக்காவின் வரலாற்றுச் சிறப்பை மேலும் எடுத்துக்காட்டுவது மட்டுமின்றி வித்தியாசமான கலாசார சிறப்புமிக்க சுற்றலாத் தலத்தை உருவாக்கவும் வகைசெய்யும் என்று திரு அப் ராவ்ஃப் தெரிவித்தார்.
“மரபு, வரலாறு, நாகரிகமயமாதல் ஆகியவற்றைச் சித்திரிக்கும் உலகப் பிரபல மாநிலம் என்ற சிறப்புக்கு இந்தக் கண்டுபிடிப்பு மேலும் மெருகூட்டும்,” என்றும் அவர் பெருமைபட்டார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?