
மதுரை, ஆக.11-
மதுரை மாநகராட்சி மற்றும் ஹலோ ஈவன்ட்ஸ் இணைந்து, தமுக்கம் மைதானத்தில் ஆகஸ்ட் 15 முதல் 17 வரை மாலை 4 மணி முதல் 9 மணி வரை “இசையோடு ருசியோடு விளையாடு – நம்ம ஊரு திருவிழா, நமக்கான பெருவிழா” நடைபெறுகிறது. இந்த உணவுத் திருவிழாவில் தினமும் மாலை 4 மணி முதல் பாரம்பரிய விளை யாட்டுகள், டூரிங் டாக்கிஸ், ஆயாகடை–சாயாகடை, மதுரை சிறப்பு உணவுகள், பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பங்கள் ஒன்றாகக் கலந்து மகிழும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. கலைத்திறமை உள்ள குழந்தைகளுக் காக டேலண்ட் ஹண்டர்ஸ் அகாடமி மூலம் மாறுவேடம், நடனம், ஓவியம், கோலம், ஒரு நிமிட கலைத்திறன் போன்ற போட்டிகள் நடைபெறும். போட்டிகள் நடத்தவோ, அரங்குகள் அமைக்கவோ விருப்பம் உள்ளவர்கள் ஹலோ ஈவன்ட்ஸ் – 98436 15157, 98430 15157, 97909 59357, 80989 84545 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். பொதுமக்களுக்கு நுழைவு இலவசம்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?