
அரியலூர், ஆக. 11-
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடை பெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 276 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு, ஆட்சியர் பொ.ரத்தின சாமி தலைமை வகித்து, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது விசாரணை மேற் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விட்டார். முன்னதாக அவர், மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறை மூலம் சம்ருதி பவுண் டேஷன் சார்பில் மாற்றுத்திறனாளிகள் கணக் கெடுப்பு பணிகள் மேற்கொள்ளும் முன்களப் பணியாளர்களுக்கு கைக் கணினி களை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?