மணமேல்குடி ஒன்றிய ஆசிரியருக்கு அன்பாசிரியர் விருது

மணமேல்குடி ஒன்றிய ஆசிரியருக்கு அன்பாசிரியர் விருது

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றிய ஆசிரியருக்கு அன்பாசிரியர் விருது பள்ளி கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்



தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் தனித்திறமைகள் கற்றல் செயல்பாடுகள் மாணவர்கள் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து 

விருது வழங்கிடும் பொருட்டு ராம்ராஜ் காட்டன் இந்து தமிழ் திசை நாளிதழ் இணைந்து வழங்கும் அன்பாசிரியர் விருதுக்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 550 ஆசிரியர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்திருந்தனர் அவர்களின் முதல் கட்ட தேர்வுக்கு 160 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இரண்டாம் கட்டமாக இணைய வழியில் நேர்காணல் நடத்தப்பட்டு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் அதன்படி *புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் நடுநிலைப் பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த தற்பொழுது தண்டலை நடுநிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் திரு மு சீனிவாசன்* அவர்கள் அன்பாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார் அவருக்கு இன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் 

*மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யா மொழி* அவர்கள் மற்றும் ராமராஜ் காட்டன் நிறுவன உரிமையாளர் நாகராஜன் அவர்கள் இந்து தமிழ் திசை நாளிதழ் நிர்வாக இயக்குனர் சங்கர் அவர்கள் ஆகியோர் இணைந்து அன்பாசிரியர் விருது வழங்கினார்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%