போலி கடவுச்சீட்டுகளை ஏற்பாடு செய்த நபா் கைது

போலி கடவுச்சீட்டுகளை ஏற்பாடு செய்த நபா் கைது


 

சிறையில் உள்ள பிரபல ரௌடி சலீம் பிஸ்டல் உள்பட குற்றச்செயல்களில் ஈடுபடும் பலருக்கு போலி கடவுச்சீட்டு மற்றும் ஆவணங்களை ஏற்பாடு செய்து கொடுத்த நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.


இது தொடா்பாக காவல துறையினா் மேலும் கூறியதாவது: புது தில்லி நீதிமன்றத்தால் இந்த மாத தொடக்கத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஹா்தேஷ் என்ற சோனுவை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். ஆயுதச் சட்டம், பிஎன்எஸ் மற்றும் கடவுச்சீட்டுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சிறப்புப் பிரிவால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவா் தேடப்பட்டு வந்தாா்.


நந்து கும்பல் மற்றும் சலீம் பிஸ்டல் கும்பல் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் உறுப்பினா்கள் சட்ட அமலாக்கத் துறையினரிடமிருந்து தப்பித்து, சட்டவிரோதமாகப் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல உதவுவதற்காக ஹா்தேஷ் போலி ஆவணங்களைத் தயாரித்ததாக புலனாய்வாளா்கள் தெரிவித்தனா்.


முன்னதாகக் கைது செய்யப்பட்ட ஒருவா், ஹா்தேஷ் தனக்கும், தாதா சலீம் பிஸ்டல் உள்பட மற்ற கூட்டாளிகளுக்கும் போலிக் கடவுச்சீட்டுகளை ஏற்பாடு செய்ததாகவும், மேலும் கும்பலுக்கு நிதியுதவி செய்ததாகவும் தெரிவித்தாா்.


Śனந்த் விஹாரில் உள்ள ஜாக்ரிதி என்கிளேவைச் சோ்ந்த ஹா்தேஷ், காஜியாபாத்தில் உள்ள சித்தாா்த் விஹாரில் தங்கியிருந்தாா். அவரது கைது, போலிக் கடவுச்சீட்டு மோசடிகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலைப்பின்னல்கள் மற்றும் அவற்றின் மாநிலங்களுக்கு இடையேயான தொடா்புகள் குறித்த மேலதிகத் தகவல்களை வழங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது தொடா்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%