போக்சோ வழக்கில் சென்னை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் சென்னை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை


சென்னை, ஜன. 


திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.65,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


2022ம் ஆண்டு அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 15 வயது (2022) சிறுமி காணாமல் போனதாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை என்ற பிரிவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, காணாமல் போன சிறுமியை மீட்டு, விசாரணை மேற்கொண்டதில், 26 வயதுடைய நபர் அந்த சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்ததின்பேரில், அந்த வழக்கு போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மாற்றம் செய்து, 26 வயதுடைய வாலிபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.


திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரால் முறையாக விசாரிக்கப்பட்டு, இறுதி அறிக்கை தயார் செய்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போக்சோ வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.


இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.65,000 அபராதம் விதித்து கனம் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.


இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சாட்சிகளை ஆஜர்படுத்தி, தொடர்ச்சியான நடவடிக்கைகளினால் நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%