பென்சிலே என் எழுதுகோல்...

பென்சிலே என் எழுதுகோல்...


பள்ளிக்காலங்களில் ஸ்லேட்டில் முதலில் எழுதிய எழுத்துக்கள் நினைவிற்கு வர..

பின்பு கிடைத்ததே பென்சில் என்ற ஓர் ஆயுதம்

காகிதத்தில் அதனைக் கொண்டு தவறாக எழுதினாலும் அதனை அழிக்க இயலும் என்பதால் ஆவலுடன் எழுதத் தொடங்கினேன்.

பலப் பல எண்ணங்களை அதில் எழுத

வெள்ளை காகிதத்தில் கருப்பு நிற எழுத்துக்கள் என்னை பார்த்து சிரித்தன...

மரத்தில் செய்யப்பட்ட பென்சில் 

கரத்தில் இருக்கும் போது மகிழ்ச்சியால் பலவித எண்ணங்களை எழுதத் தோன்றியது ... 

எண்ணங்களின் முதல் மொழியே பென்சில் என்பதை உணர்வோம் 

காகிதத்தில் கனவுகளை விதைக்கும் விதை,

அழித்தாலும் மீண்டும் எழுதச் சொல்லும் நண்பன்,

மௌனத்துக்கும் அர்த்தம் தரும் சிறு ஆயுதம்.

பென்சில் கொண்டு பல விதப் படைப்புகளை படைப்போம் மகிழ்ச்சியாக எழுதுவோம்.


உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%