புதுமை சீமாட்டி !

புதுமை சீமாட்டி !


ரவுண்டானாவை நெருங்கியபோது வரிசையாக முதலில் நின்ற ஷேர் ஆட்டோ டிரைவர் அழைத்தார்.


" சார் ! எங்கே போறீங்க ?" 


" பூந்தமல்லிக்கு தம்பி !" 


" நம்ம ஆட்டோதான் ஃபர்ஸ்ட் ! ஏறிக்கோங்க !" என்றதும் நான் ஏறி 

க்கொண்டேன். 


 ஏற்கனவே எதிர் இருக்கையில் நான்கு பேர் அமர்ந்து கொண்டிரு ந்தனர். நான் அமர்ந்திருந்த இருக்கை யில் இன்னும் மூன்று நபர்கள் உட்கார முடியும். அவர்கள் வந்து ஏறிக்கொண்

டால் ஆட்டோவை கிளப்ப வேண்டி 

யதுதான்.


" காட்டுப்பாக்கம் , கும்மணாம்சாவடி , 

பூந்தமல்லி .." என உரக்க குரல் கொடு

த்தார் டிரைவர்.


அப்போது பருத்த பெண் ஒருத்தி ஆட்டோவில் ஏற முற்பட்டபோது திடுக்கிட்ட டிரைவர் , " எங்கேம்மா போறீங்க ?" என கொஞ்சம் அச்ச த்துடன் கேட்டார்.


புடவைத்தலைப்பை இழுத்து சொரு கிக் கொண்டவள் , " பூந்தமல்லிக்கு !" பதில் சொல்லிவிட்டு தன் பருத்த உடலை ஆட்டோவுக்குள் திணித்து பொத்தென்றுஇருக்கையில் உட்கார, ஆட்டோ ஒருதடவை குலுங்கிநின்றது. நானும்தான் மற்றவர்களோடு குலுங் 

கினேன். 


அவள் உட்கார்ந்ததும் அவளின் பருத்த மேனி என்னை கதவிடுக்கில் நசுங்கிய பல்லிபோல நசுக்கி எடுத் தது. உடனே அவள் " சாரி சார் ! " என்றாள். நான் ஒன்றும் பேசாமல் 

உடல் நெளிந்தேன். 


சரிதான் கடைசிவரை இவளோடு நான்போராடணும்னு என் தலையில் எழுதியிருக்கு மனத்தில் நொந்து கொண்டேன். எதிரில் உட்கார்ந்தவர்

கள் கால் முட்டி இடித்ததால் அவர்க

ளின் முகங்கள் கோணிப் போயின.


ஆனால் ஆட்டோடிரைவரின் நிலைமை மோசமாக இருந்தது ! அந்த இருக்கையில் நாலு பேர் பயணம் செல்லவேண்டிய இடத்தில்இப் போது இரண்டேபேர் ! ஏனென்றால்எங்கள் இருவருக்குமே இருக்கை சரியாக

இருந்தது. அதனால் அவருக்கு இரண்டு பேரின் பயணப்பணம் மட்டும்தான் கிடைக்கும்.  


 ஏக விசனத்துடன் ஆட்டோவைக் கிளப்பினார் டிரைவர்.


ஒருவழியாக பூந்தமல்லி வந்து சேர்ந்

தோம். எல்லோரும் இறங்கினர்.


என் பக்கத்தில் அமர்ந்து கொண் டிருந்தவள் மிகவும் சிரமப்பட்டுதான் இறங்கினாள். நான் கொஞ்சம் ஆசு வாசப்பட்டு பையைப் பக்கத்தில் வைத்துவிட்டு கால்கள் இரண்டையும் அகலமாய் வைத்துக்கொள்ள ' அப்பா டா ' என்றிருந்தது.


அவள் இறங்கியவுடன் , தன் தோளில்

தொங்கிக்கொண்டிருந்த பையைத்

திறந்து நூறு ரூபா நோட்டு ஒன்றை

எடுத்து ஆட்டோடிரைவரிடம் நீட்டி னாள்.


அதை வாங்கிக் கொண்ட டிரைவர் மீதி எண்பது ரூபாவை அவளிடம் திருப்பித் தந்தார்.


உடனே அவள் பத்து ரூபா நோட்டு ஒன்று டிரைவரிடம் கேட்க , கண்களில் கேள்விக் குறியுடன் பத்துரூபாவை எடுத்து நீட்டினார்.


அதை வாங்கிக் கொண்டவள் ஐம்பது

ரூபாவை டிரைவரிடம் நீட்டினாள்.

" எனக்கான பணம் இருபது ,.நான்

ஆக்கிரமித்த மற்ற இரண்டுபேரோட

சீட்டுக்கான பணம் நாற்பது ரூபா .! " என கூறிவிட்டு நடையைக் கட்டினாள்.


டிரைவர் பிரமிப்பில் உறைந்து போயி

ருந்தார் ! சுதாரித்தவர் , அந்தப் பெண்

மணியைப் பற்றி தவறான அபிப்ரா யம் கொண்டதற்காக அவளிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.


எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டி

ருந்த நானும் வியப்பில் ஆழ்ந்திருந் தேன்!


இறங்கி பணம் கொடுக்கும்போது டிரைவரிடம் , " என்னப்பா டிரைவர் ! அந்தம்மா நடந்துகொண்டது ஆச்சர் யமாயிருக்கு இல்ல?" என்றேன். 


" ஆமாம் சார் ! என் வாழ்க்கையில முதல் முறையா இதுமாதிரி அனுப வம் ! இவ்வளவு பெருந்தன்மையா யாரும் இதுவரை நடந்தது கிடை யாது...உண்மையிலயே அவங்க பெரியமனுஷிதான் சார் !" 


" கரெக்ட் ! யாரையும் புறத்தோற்றம் 

கண்டு எடைபோடக்கூடாது என்பத ற்கு இந்த அம்மா ஒரு உதாரணம் ! " என கூறி பணத்தை டிரைவரிடம் கொடுத்து விட்டு நடையைக் கட்டி னேன்.



வி.கே.லக்ஷ்மிநாராயணன் 

        

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%