இராமநாதபுரம், ஜன.- இராமநாதபுரம் மாவட்டம், சீதக்காதி விளையாட்டு மைதான வளாகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் ரூ.12.35 கோடி மதிப்பீட்டில் புதிய செயற்கை இழை ஓடுதளப்பாதை அமைப்பதற்கான பணிகள் திங்கட்கிழமை துவக்கப் பட்டன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் முன்னிலையில், வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், திரு வாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் ஆகி யோர் கலந்து கொண்டனர். மேலும், இராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கே. கார்மேகம், நகர்மன்ற துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மூ.தினேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?