பிரம்மபுரம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு
Oct 04 2025
37
வேலூர், அக். 5-
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மபுரம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு காலை நான்கு மணி அளவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதை தொடர்ந்து ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்து ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தனர். கோவிலில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிரம்மபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேசன், திருப்பணி குழு செயலாளர் டீக்காராமன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரகுராமன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தனசேகரன், கபில்தேவ் ஆகியோர் வெகுவிமரிசையாக செய்திருந்தனர். காட்பாடி 1வது மண்டல குழு தலைவி புஷ்பலதா வன்னியராஜா தனது குடும்பத்தினருடன் வந்து ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளை தரிசித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?