பாம்பு கடித்த சிறுமியை காப்பாற்றிய புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்

பாம்பு கடித்த சிறுமியை காப்பாற்றிய புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்



புதுக்கோட்டை, அக். 23- என்ன பிரச்சினை என்று தெரியாமல் மயங்கிய நிலையில் 24 மணிநேரம் கழித்து கொண்டுவரப்பட்ட சிறுமியை, கட்டுவிரியன் பாம்பு கடித்ததாக முடிவெடுத்து தொடர் சிகிச்சை மூலம் காப்பாற்றிய புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு, பெற்றோர்கள் கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள குளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பழனி. இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களின் 6 வயது மகள் மதுஸ்ரீ. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மதுஸ்ரீக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கண்கள் திறக்க முடியாமல் மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனடியாக, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அந்த சிறுமியை கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமிக்குரிய பிரச்சனையை கண்டறியாததால் பின்னர், வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் நாட்டு வைத்தியரிடம் அழைத்துச் சென்றும் சரியாகாததால் 24 மணி நேரம் கழித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தைக்கு குடல் வால்வு பிரச்சனையால் ஏற்படும் வயிற்று வலி இல்லை என்று உறுதி செய்துள்ளனர். கண்களை திறக்கச் சொல்லியபோது, சிறுமி திறக்க முடியாமல் கைகளால் கண்களை திறக்க முயற்சி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மருத்துவக் குழுவினர் கட்டுவிரியன் பாம்பு கடித்திருக்கலாம் என்று எண்ணி உடனடியாக குழந்தைக்கு பாம்பு கடி விஷம் முறிவு மருந்து கொடுத்து, சிகிச்சையை தொடங்கியுள்ளனர். முதலில் சிறுமியின் உடல் அதை ஏற்றுக் கொள்ளாமல் பல்வேறு தொந்தரவுகளை கொடுத்தது. மருத்துவர்கள், இடைவிடாமல் சிகிச்சை மேற்கொண்டு மொத்தமாக 15 முறை விஷமுறிவு மருந்தை கொடுத்து தொடர்ந்து ஒரு வாரம் சிகிச்சைக்கு பின்னர் சிறுமியை நலமுடன் மீட்டு, பெற்றோர்களிடம் ஒப்படைத்து சாதனை படைத்துள்ளனர். உரிய சிகிச்சை அளித்து தங்களது மகளை காப்பாற்றிய மருத்துவர் குழுவினருக்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%