
நாகர்கோவில், ஜூலை 18-
தமிழக அரசு ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து,பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்காவில் விளையாட்டரங்கம் முன் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர்(டிட்டோ ஜாக்) நேற்று சாலை மறியல் செய்தனர்.
இதில் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் தியாகராஜன், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?