நிர்வாகிகளுடன் ஆலோசித்து 2 தினங்களுக்கு பின் முடிவு பெரியகுளத்தில் ஓ.பி.எஸ்.பேட்டி
Jan 25 2026
11
தேனி ,ஜன.
- சென்னையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலை மைக் கழக நிர்வாகிகளுடன் 2 நாட்களுக்கு பின் ஆலோச னைக் கூட்டம் நடைபெறும். அதன் பிறகு எனது முடிவை அறிவிப்பேன். தை மாதம் முடிவதற்குள் உரிய பதில் அளிக் கப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் .தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் தங்கியுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூட்டணி தொடர்பாக செய்தியா ளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு 2 தினங்களுக்கு பின் சென்னையில் மாவட்ட செய லாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோ சனைக் கூட்டம் நடத்த உள்ளதாகவும், அதன் பிறகு தனது முடிவை சென்னையில் அறிவிப்பேன் எனக் கூறினார். தொடர்ந்து பிரதமர் பங்கேற்கும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. மேலும் தை பிறந்தால் வழி பிறக்கும். அப்போது முடிவை அறி விப்பதாக தெரிவித்த கேள்விக்கு, தை மாதம் முடிவதற்குள் உரிய பதில் அளிக்கப்படும் எனக் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?