நவ. 2- அனைத்துக் கட்சிக் கூட்டம் 60 கட்சிகளுக்கு அழைப்பு
Nov 01 2025
10
சென்னை, அக். 30- தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி என்ற தேர்தல் ஆணையத்தின் சீர்குலைவு முயற்சியை முறியடிப்பது தொடர்பாக, நவம்பர் 2 அன்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக ஏற்பாடு செய்துள்ளது. இக்கூட்டத்திற்காக திமுக தலைமை நிலைய செயலாளர்களான பூச்சி முருகன், துறைமுகம் காஜா, ஆஸ்டின் ஆகியோர் ஒவ்வொரு அரசியல் கட்சியின் அலுவலகங்களுக்கும் சென்று அழைப்புக் கடிதம் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் அலுவலகங்களுக்கு வந்து பூச்சி முருகன் குழுவினர் அழைப்புக் கடிதத்தை வழங்கினர். இதேபோல, திராவிடர் கழகம், காங்கிரஸ், விசிக, மதிமுக, ம.ம.க., கொ.ம.தே.க., த.வா.கா., ம.நீ.ம., முஸ்லிம் லீக், ம.ஜ.க., முக்குலத்தோர் புலிப்படை ஆகிய திமுக கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமன்றி, பாமக (ராமதாஸ்), அமமுக, அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்குழு (ஓபிஎஸ்), த.வெ.க. த.மா.கா., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, எஸ்டிபிஐ, த.ம.மு.க., உள்ளிட்ட 60 கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தும் திமுக சார்பில் அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி) ஆகிய மூன்று கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?