கோவில் சொத்து விவரங்களை இணையத்தில் வெளியிட உத்தரவு

கோவில் சொத்து விவரங்களை இணையத்தில் வெளியிட உத்தரவு



சென்னை, அக். 30 - தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள், மடங்கள், கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ள சொத்துக் கள், நிதி மற்றும் நிலங்கள் தொடர்பான விவரங்கள், அறநிலையத்துறையின் உத்தரவுகள், அரசாணை கள், டெண்டர் அறிவிக்கை கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணை யத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத் தில் டி.ஆர். ரமேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை தரப்பில், கோவில் நிலங்கள் தொடர்பான ஆவ ணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தால் அதன் மூலமாக முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது என விளக்கம் அளிக்கப் பட்டது. ஏற்கெனவே, வருவாய்த் துறையின் ‘தமிழ் நிலம்’ என்ற இணைய தளம் வாயி லாக மாநிலத்தில் உள்ள நிலங்களின் வகைப்பாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பொது மக்கள் அறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. நீதிபதி குறுக்கிட்டு, நகைகளை அணிந்து சென்றால் திருடர்கள் வழிப்பறி செய்து விடு வார்கள் என்பதற்காக யாரா வது தங்க நகை அணியாமல் செல்கிறார்களா என்று கேட்டார். கோவில்களின் சொத்துக்களை அனை வரும் தெரியும் வண்ணம் வெளியிடும்போது, நிலங் களை வாங்குபவர்கள் எச்ச ரிக்கையாக இருப்பார்கள் அல்லவா, என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, மனுதாரர் கோரியுள்ள அனைத்து விவரங்களும் சட்ட ரீதியாக பொது ஆவணங்கள் ஆகும். அவற்றை வெளி யிட முடியாது என மறுக்க முடியாது. எந்தெந்த தகவல்கள் பதிவேற்றம் செய்ய முடியும், எந்தெந்த தகவல்கள் தற்போது பதி வேற்றம் செய்யப் பட்டுள்ளது என்பது குறித்து விரிவான பதில் மனுவை அறநிலையத்துறை கமி ஷனர் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை யை நவம்பர் 12-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%