தேவீரஅள்ளிஅரசுப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
Nov 07 2025
12
காவேரிப்பட்டினம் ஒன்றியம் தேவீரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு துணை தலைவி பிரியா தலைமை வகித்தார். பொறுப்பாசிரியர் கவிதா வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துலட்சுமணன் மாணவர்கள் இடைநின்றலை தவிர்த்தல், இளம் வயது திருமணம் தடை செய்தல், அனைத்து குழந்தைகளும் பள்ளியில், மணற்கேணி தூதுவர் செயலி பயன்படுத்துதல், ஆதார் புதுபித்தலின் முக்கியத்துவம் ஆகிய கூட்ட பொருள் சார்ந்து உரையாற்றினார். தமிழாசிரியர் திருமலை திறன் இயக்கம் மற்றும் மகிழ் முற்றம் ஆகியவற்றில் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து பேசினார். கல்வியாளர் அம்சவேணி நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?