தேசத்தின் கவுரவம் காப்பதை மோடியிடம் கற்க வேண்டும்: நெதன்யாகுவுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் அறிவுரை

தேசத்தின் கவுரவம் காப்பதை மோடியிடம் கற்க வேண்டும்: நெதன்யாகுவுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் அறிவுரை

டெல் அவிவ்:

இஸ்​ரேலுக்​கும் பாலஸ்​தீனத்​தின் ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் இடை​யில் தொடர்ந்து மோதல் ஏற்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், ‘‘இஸ்​ரேலின் தேசிய பாது​காப்பு மற்​றும் ஜயோனிஸ்ட் ஸ்டிரேட்​டஜி’’க்​கான மிஸ்​காவ் இன்​ஸ்​டிடியூட் மூத்த நிபுணர் ஸாக்கி ஷெலோம் கூறிய கருத்​துகளை ஜெருசலேம் போஸ்ட் பத்​திரிகை செய்தி வெளி​யிட்​டுள்​ளது.


அதில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா - பாகிஸ்​தான் இடையே ஏற்​பட்ட போர் விவ​காரம், இந்​தியா மீது 50% வரியை அமெரிக்கா விதித்த விவ​காரம் ஆகிய​வற்​றில் பிரதமர் மோடி கடுமை​யான நிலைப்​பாட்டை எடுத்​தார். அவரது அந்த நிலைப்​பாடு, தேசிய கவுரவம் என்​பது ஆடம்​பர​மானது அல்ல; அது ஒரு சொத்து என்​பதை தெளிவுப்​படுத்​தி​யது.


இந்​தியா - பாகிஸ்​தான் போரை நான்​தான் நிறுத்​தினேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல முறை கூறி​விட்​டார். அதை இந்​தியா தொடர்ந்து மறுத்து வரு​கிறது. தேசத்​தைப் புண்​படுத்​தும் விஷ​யத்​தில் பிரதமர் மோடி கடுமை​யாக நடந்து கொண்​டார். ஒருபடி மேலாக அதிபர் ட்ரம்ப் 4 முறை தொலைபேசி​யில் அழைத்​தும் அதை பிரதமர் மோடி நிராகரித்து தனது நிலைப்​பாட்டை உறுதி செய்​துள்​ளார்.


இந்​தச் சூழ்​நிலை​யில் தேசத்​தின் கவுர​வத்தை பாது​காப்​பது எப்​படி, தேசத்​தின் கவுர​வத்தை ஒரு சொத்​தாக மாற்​று​வது எப்​படி என்​பது போன்ற முக்​கிய​மான விஷ​யங்​களை பிரதமர் மோடி​யிடம் இருந்து பிரதமர் நெதன்யாகு கற்​றுக் கொள்ள வேண்​டும். காசா​ மருத்​து​வ​மனை மீது குண்டு வீசி தாக்​குதல் நடத்​தி​ய​தில் 20 பேர் உயி​ரிழந்​தனர். அதன் பிறகு இஸ்​ரேல் அரசும் ராணுவ​மும் அவசரப்​பட்டு விளக்​கம் அளித்​தன. இஸ்​ரேல் ராணுவ தளப​தி​யும் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு​வும் தனித்​தனி​யாக வேறு​பட்ட கருத்​துகளை வெளி​யிட்​டனர். இது சர்​வ​தேச மக்​கள் கருத்தை தணிப்​ப​தற்​காக இருந்​தா​லும், தங்​களது பதற்​றத்​தை​ வெளிப்​படுத்​து​வ​தாக அவர்​களு​டைய கருத்​துகள் இருந்​தன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%