ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஒட்டப்பட்ட போஸ்டர் மூலம் பல மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதிகளின் சதியை ஸ்ரீநகர் போலீஸ் அதிகாரி கண்டுபிடித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் மத்தியில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு சார்பில் ஒட்டப்பட்டிருந்த அதில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துவோம் என கூறப்பட்டிருந்தது. இது வழக்கமாக விடுக்கப்படும் மிரட்டல் போஸ்டர் போல் இருந்தது.
ஆனால் ஸ்ரீநகர் எஸ்எஸ்பியாக உள்ள டாக்டர் ஜி.வி.சந்தீப் சக்கரவர்த்தி, இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த போஸ்டரை ஒட்டியவர்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்டறியப்பட்டனர். அவர்கள் மீது ஏற்கெனவே கல் எறிந்த வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவர்களிடம் நடத்திய விசாரணையில், தீவிரவாத சதி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷனில் ஜம்மு காஷ்மீர், ஹரியானா, மற்றும் உத்தர பிரதேசத்தில் காஷ்மீர் மருத்துவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஜெய்ஷ்-இ -முகமது அமைப்புடன் சேர்ந்து தீவிரவாத சதி திட்டங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. உமர் நபி டெல்லியில் காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினார்.
எனினும் பெரிய அளவிலான சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது. இவர்கள் கைதுக்குக் காரணமாக இருந்த சக்கரவர்த்தி, தலைமையிலான காஷ்மீர் போலீஸார்தான் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மேற்கொண்டு பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் 3 பேரை சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவை சேர்ந்தவர்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் சக்கரவர்த்தி மருத்துவக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை மருத்துவர் ஜி.வி.ராமகோபால் ராவ், ஆந்திர அரசுத் துறையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தாயார் பி.சி. ரங்கம்மா, தற்போது சுகாதாரத் துறையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். ஜி.வி.சந்தீப் சக்கரவர்த்தியும் எம்பிபிஎஸ் படித்தவர்தான். அதன் பின்னர் தான் அவர் காஷ்மீரில் எஸ்எஸ்பியாக பணியாற்றி வருகிறார். அங்கு தீவிரவாத ஆபரேஷன்களில் ஈடுபட்டுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?