திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 24 ம் தேதி துவங்குகிறது. 7ம் நாள் திருவிழாவில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறும். விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேரில் எழுந்தருளி தனித்தனியாக மாட வீதியில் வலம் வருவார்கள். இதில் பராசக்தி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பார்கள்.
இதில் சுமார் 45.11 அடி உயரமுள்ள பராசக்தி அம்மன் தேர், ரூ.71 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டது. இதன் வெள்ளோட்டம் நடந்தது. அம்மன் தேருக்கு கீர்த்தி வாசன், கோகுல் சேஷாத்திரி மற்றும் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். அதனைத் தொடர்ந்து அண்ணாமலையாருக்கு அரோகரா, ஓம் சக்தி கோஷத்துடன் தேர் வெள்ளோட்டம் துவங்கியது. ஏராளமான பெண்கள் பக்தி முழக்கத்துடன வடம் பிடித்து தேர் இழுத்தனர்.கோயில் இணை ஆணையா் பரணிதரன் மற்றும் இந்து சமய நிலையத் துறை அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?