
திருநெல்வேலி
கடந்த 2011-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி, எடுப்பூரை சேர்ந்த முத்துபாண்டி (வயது 52) என்பவர் தனது மனைவியை வரதட்சணை கொடுமை செய்து, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட வழக்கில், நாங்குநேரி குற்றவியல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பினை நீதிமன்ற நடுவர் பூமிநாதன் வழங்கினார்.
நாங்குநேரி நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான முத்துப்பாண்டி மற்றும் அவரது இரண்டாவது மனைவி சசிகலா ஆகிய 2 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்கள் 2 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்த டி.எஸ்.பி. விஜயகுமார் (தற்போது ஓய்வு) மற்றும் நீதிமன்ற விசாரணை நடைபெற சிறப்பாக கண்காணிப்பு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா நடராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் காவல்துறையினரையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் அனிதா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?