தவெகவில் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலி: கட்சி நிர்வாகிகளுக்கு பயிற்சி

தவெகவில் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலி: கட்சி நிர்வாகிகளுக்கு பயிற்சி

சென்னை:

தவெக​வில் உறுப்​பினர் சேர்க்​கைக்​காக நவீன வசதி​களு​டன் அறி​முகப்​படுத்​தப்பட உள்ள புதிய செயலி​யின் செயல்பாடு குறித்​து, கட்​சி​யின் நிர்​வாகி​களுக்கு பொதுச்​செய​லா​ளர் என். ஆனந்த் தலை​மை​யில் நேற்று பயிற்சி வழங்​கப்​பட்​டது. தவெக சார்​பில் உறுப்​பினர் சேர்க்கை மற்​றும் தேர்​தல் பிரச்​சார பயிற்​சிப் பட்​டறை பனையூரில் உள்ள கட்​சி​யின் தலைமை அலுவலகத்​தில் நேற்று நடை​பெற்​றது.


பொதுச்​செய​லா​ளர் தலைமை வகித்​தார். இதில் அனைத்து மாவட்​டங்​களில் இருந்​தும் கட்​சி​யின் மாவட்ட செய​லா​ளர்​கள், அந்த மாவட்​டத்​தின் தொழில்​நுட்ப அணி​யில் இருந்து 2 ஐடி விங் நிர்​வாகி​கள் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.


பயிற்சி பட்​டறை​யின் போது தவெக உறுப்​பினர் சேர்க்கை தொடர்​பாக அக்​கட்​சி​யின் தகவல் தொழில்​நுட்ப அணி​யினருக்கு பயிற்சி வழங்​கப்​பட்​டது. தொடர்ந்து வீடு​வீ​டாக சென்று உறுப்​பினர்​கள் சேர்க்கை அதி​கரிப்​பது குறித்து அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டன.


ஏற்​கெனவே உறுப்​பினர் சேர்க்​கைக்கு செயலியை அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய் அறி​முகப்​படுத்​தி​யிருந்த நிலை​யில், தொடர்ந்து தவெக சார்​பில் நவீன வசதி​களு​டன் ‘மை-டிவி​கே’ என்ற செயலி உரு​வாக்​கப்​பட்டு அதன்​மூலம் உறுப்​பினர்​கள் சேர்க்​கப்பட உள்ளனர்.


இந்த செயலியின் பயன்​பாடு குறித்​தும், செயலி மூலம் உறுப்​பினர்​களை சேர்ப்​பது தொடர்​பாக​வும் நிர்​வாகி​களுக்கு பயிற்சி அளிக்கப்​பட்​டது. இதில் கலந்து கொண்ட நிர்​வாகி​களுக்கு செல்​போன் கொண்டு செல்ல அனு​மதி வழங்​கப்​பட​வில்​லை. மடிக்​கணினி​யுடன் மட்​டுமே பயிற்​சி​யில்​ கலந்​து கொண்​டனர்​.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%