தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது: பிரேமலதா பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது: பிரேமலதா பரபரப்பு குற்றச்சாட்டு

திருவாரூர், செப். 9–


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்று பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார்.


திருவாரூரில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர் கூறியதாவது:


அண்ணா தி.மு.க. 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை. ஒவ்வொரு கட்சியும் அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. அண்ணா தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையனின் பதவியில் பறிக்கப்பட்டது உட்கட்சி பிரச்சினை.


விஜய்க்கு வாழ்த்துக்கள்


வருகின்ற 13-ந்தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் த.வெ.க. தலைவர் விஜய்-க்கு வாழ்த்துக்கள்.


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதை பழக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றவில்லை. தற்போது அனைத்து விலைவாசியும் உயர்ந்து விட்டது. தங்கம் விலை, சொத்து வரி உள்பட அனைத்தும் உயர்ந்து விட்டது. இதையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து குறைக்க வேண்டும்.


ஜெயலலிதா ஆளுமை மிக்க தலைவர். ஒரு பெண் தலைவர் எனது 'ரோல் மாடல்' என நான் பலமுறை ஜெயலலிதாவை சொல்லி இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமியும் கடந்த ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், அவர் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.


இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%