தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் சீர்காழியில் பெரியாரியல் பயிலரங்கம்
Aug 12 2025
11

சீர்காழி , ஆக , 13 -
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பெரியாரியல் பயிலரங்கம்
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் சீர்காழி ஒன்றிய தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. பெரியாரியல் பயிலரங்கத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக மயிலாடுதுறை மாவட்ட அமைப்பாளர் நந்தராசேந்திரன் தலைமை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழக சீர்காழி நகர தலைவர் மனோஜ் வரவேற்புரையாற்றினார். தந்தை பெரியார் திராவிடர் கழக சீர்காழி நகர தலைவர் ரகுதாத், நகர செயலாளர் மனோஜ் , மயிலாடுதுறை நகர செயலாளர் முகேசு முன்னிலை வகித்தனர் . உலகம் தோற்றமும் உயிர்களின் பரிணாம வளர்ச்சியும் என்ற தலைப்பில் பகுத்தறிவாளர் கழக நகர செயலாளர் ஆசிரியர் வெண்மணியழகன், கடவுள் மறுப்பு தத்துவம் ஒரு விளக்கம் என்ற தலைப்பில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் குணசேகரன், சம்பிரதாயங்கள் சரியா என்ற தலைப்பில் சீர்காழி பெரியார் செல்வம் சிறப்புரையாற்றினர்கள் . தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பார்த்திபன் நன்றி உரையாற்றினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?