
சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று(ஜூலை 7) ஒரே நாளில் ரூ. 15 குறைந்து. ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காய்கறிகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.
கடந்த சில நாள்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால், அதன் விலையும் உயர்ந்து காணப்பட்டது.
அதன்படி, கடந்த வாரம் சில்லரை விற்பனைக் கடைகளில் ஒருகிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரையும் மொத்த விற்பனையில் ரூ.50 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று(ஜூலை 7) ஒரே நாளில் ரூ. 15 குறைந்து. மொத்த விலையில் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லரை விற்பனைக் கடைகளில் ரூ. 40 வரை விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக, மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?