சைபர் குற்ற கும்பல்களிடமிருந்து ஒரே மாதத்தில் ரூ.1.62 கோடியை மீட்ட சைபர் க்ரைம் போலீஸார்

சைபர் குற்ற கும்பல்களிடமிருந்து ஒரே மாதத்தில் ரூ.1.62 கோடியை மீட்ட சைபர் க்ரைம் போலீஸார்

சென்னை:

சைபர் குற்ற கும்​பல்​களிட​மிருந்து கடந்த ஒரு மாதத்​தில் ரூ.1.62 கோடியை மீட்ட சென்னை போலீ​ஸார், அதை உரியவர்களிடம் ஒப்​படைத்​துள்​ளனர். ஆன்​லைன் வர்த்​தகம், டிஜிட்​டல் கைது, ஆன்​லைன் பகுதி நேர வேலை, கிரிப்டோ கரன்​சி, வாட்​ஸ்​-அப் ஹேக்​கிங் உட்பட பல்​வேறு வகை​யான மோசடிகள் ஆங்​காங்கே நடை​பெற்று வரு​கின்​றன. இந்த வகை மோசடி மூலம் பொது​மக்​களின் கோடிக்​கணக்​கான பணமும் சுருட்​டப்​படு​கிறது.


சைபர் மோசடியைத் தடுக்​க​வும், பொது​மக்​கள் இழந்த பணத்தை மீட்​க​வும், குற்​ற​வாளி​களைக் கைது செய்​ய​வும் சென்னை காவல் துறை பல்​வேறு தொடர் நடவடிக்​கைகளை மேற்​கொண்​டுள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாக சென்​னை​யில் உள்ள 12 காவல் மாவட்​டங்​களில் சைபர் க்ரைம் பிரிவு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இது​போக சென்​னை​யில் உள்ள 4 மண்​டலங்​களி​லும் சைபர் க்ரைம் பிரிவு பிரத்​யேக​மாக செயல்​பட்டு வரு​கிறது.


பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் இவற்​றில் எங்​கேனும் புகார் தெரி​வித்​தால் மோசடி வங்​கிக் கணக்​கு​களை உடனடி​யாக முடக்​குதல், நீதி​மன்ற உத்​தர​வு​களின் அடிப்​படை​யில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு முடக்​கப்​பட்ட தொகையை திரும்​பப் பெற்​றுக் கொடுத்​தல் மற்​றும் சைபர் குற்ற வழக்​கு​களில் குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​களைக் கைது செய்து சிறை​யில் அடைத்​தல் ஆகிய பணி​களை சைபர் க்ரைம் போலீ​ஸார் மேற்​கொண்டு வரு​கின்​றனர்.


அந்த வகை​யில் இந்​தாண்டு கடத்த மாதத்​தில் (ஆகஸ்ட்) மட்​டும் ரூ.1 கோடியே 62 லட்​சத்து 53 ஆயிரத்தை சென்னை சைபர் க்ரைம் போலீ​ஸார் மீட்​டு, அந்த பணத்தை இழந்​தவர்​களிடம் ஒப்​படைத்​துள்​ளனர். மேலும், நடப்பு 2025-ம் ஆண்​டில் இது​வரை ரூ.20 கோடியே 41 லட்​சத்து 89,113 மீட்​கப்​பட்டு உரிய​வர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது.


பொது​மக்​கள் இணைய வழி பணப் பரி​மாற்​றம் செய்​யும்​பொழுது மிகுந்த விழிப்​புணர்​வுட​னும், அனுப்​பும் தொடர்​பு​களில் நம்​பகத்​தன்​மையை அறிந்​தும் பயன்​படுத்த வேண்​டும். புகார்​களுக்கு 1930 எண்​ணைத் தொடர்பு கொள்​ளலாம் அல்​லது www.cybercrime.gov.in என்ற மின்​னஞ்​சல் மூலம் தொடர்பு கொள்​ளலாம் என சென்னை பெருநகர காவல்​ துறை அறி​வுறுத்​தி உள்​ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%