சென்னையிலிருந்து ஏர்பஸ் விமானங்கள் இயக்க வேண்டும் ஒன்றிய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்

சென்னையிலிருந்து ஏர்பஸ் விமானங்கள் இயக்க வேண்டும் ஒன்றிய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்

சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, தூத்துக் குடி ஆகிய நகரங்களுக்கு பெரிய அளவிலான ஏர்பஸ் ரக விமானங்களை இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகனுக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரை செல்லும் பயணிகள் கடும் சிரமங்களை சந்தித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் ஏடிஆர் விமானங்கள் முனைய கட்டடத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதி யில் நிறுத்தப்படுவதால், பயணிகள் விமானத் திற்கு செல்ல பேருந்துகள் மூலம் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த பேருந்து பயணம் மதுரைக்கு செல்லும் நேரத்தைவிட கூடுதலாக இருப்பதாக வும், பேருந்துகளில் குறைவான இருக்கைகள் இருப்பதால் குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் ஆகியோர் பல மணி நேரம் நின்றபடியே பயணம் செய்ய வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பார்க்கிங் கட்டணங்களைக் குறைப்பதற் காகவே விமானங்கள் தொலைதூரத்தில் நிறுத்தப் படுவதாக அமைச்சர் தெரிவித்து, இதனால் பயணிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே மதுரைக்கான ஏடிஆர் விமானங்களை முனையத்திற்கு அருகிலேயே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இடைக்கால ஏற்பாடாக விமானங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் உள்ள இருக்கை களை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளார். மேலும், பயணிகளின் எண்ணிக்கை யைக் கருத்தில் கொண்டு, சிறிய ரக ஏடிஆர் விமானங்களுக்குப் பதிலாக பெரிய அளவிலான ஏர்பஸ் ரக விமானங்களை இயக்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%