செய்யாறு நகராட்சி முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் மத நல்லிணக்கம் முன்னிட்டு தீபாவளி இனிப்பு வழங்கல் :
Oct 19 2025
26
செய்யாறு வட்ட முத்தமிழ் சங்கம் ஏற்பாடு.
செய்யாறு அக் .19,
செய்யாறு வட்ட முத்தமிழ் சங்கத்தின் சார்பாக நகராட்சி முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்குதல், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் விழா ஆகிய இரு பெரும் நிகழ்வுகள் நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ,செய்யாறு நகராட்சி முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் மத நல்லிணக்கம் வலியுறுத்திநேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்குதல், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாள் விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு செய்யாறு வட்ட முத்தமிழ் சங்கத் தலைவர் கவிஞர் எறும்பூர் கை. செல்வகுமார் தலைமை தாங்கி, டாக்டர் ஏபிஜே .அப்துல் கலாம் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தலைமையாசிரியர் ஜோதி நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றார். இணை செயலாளர் ஆர்.தேன்மொழி, துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி,செயற்குழு உறுப்பினர்கள் ஆர். தமிழ்த்தேனி,வி. இளவரசி, உள்ளிட்டோர் பேசினர் .சங்க கருத்தாளர் புலவர் ந. கனகசபை சிறப்புரையாற்றினார். செயலாளர் எம்.பழனி, பொருளாளர் க. கோவேந்தன், துணைத் தலைவர் பி .சதீஷ்குமார், பள்ளி ஆசிரியர்கள் மீராபாய், உமா, கிரிஜா, சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .முடிவில் ஆசிரியர் எச். முபாரக் நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?