
சென்னை, செப். 7–
சென்னை மெட்ரோ ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கடந்த 5-ந்தேதி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, கோயம்பேடு வழியாக செல்லும் மெட்ரோ ரயில்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட சிறுவனிடம் கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?