சென்னையில் காணும் பொங்கல் பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீஸார்: மெரினாவில் குளிக்க தடை
சென்னை: காணும் பொங்கல் பாதுகாப்புப் பணியில் சென்னையில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபட உள்ளனர். குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மெரினாவில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக காணும் பொங்கல் வரும் 17-ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் கடற்கரை, பூங்கா உட்பட பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்வது வழக்கம்.
மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க காவல் ஆணையர் அருண் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். குறிப்பாக நகர் முழுவதும் 16 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுடன் 1,500 ஊர்க்காவல் படையினர் ஒருங்கிணைந்து பணியாற்ற உள்ளனர்.
மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் உள்ள 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்படும்.
அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?